ஆதிதிராவிடர்‌, பழங்குடியினர்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு நல்வாய்ப்பு: கிணத்துக்கடவில் சுய வேலைவாய்ப்பு கடன்‌ திட்ட விழிப்புணர்வு முகாம்.!!

புதிய தொழில்‌ துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில்‌ கலந்து கொண்டு பயன்பெறுமாறு கோவை மாவட்ட ஆட்சியர்‌ அழைப்பு விடுத்துள்ளார்‌.


கோவை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கான பிரத்யோக சுய வேலைவாய்ப்பு கடன்‌ திட்ட விழிப்புணர்வு முகாம்‌ மாவட்ட தொழில்‌ மையம்‌ மூலம்‌ கிணத்துக்கடவு மற்றும்‌ சர்க்கார்‌ சாமக்குளத்தில்‌ நடத்தப்படுகிறது.

கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ சுய வேலைவாய்ப்பை உருவாக்கும்‌ பொருட்டு மாவட்ட தொழில்‌ மையம்‌ மூலம்‌ வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ திட்டம்‌ (யூ.ஒய்.ஈ.ஜி.பி), புதிய தொழில்‌ முனைவோர்‌ மற்றும்‌ தொழில்‌ நிறுவன மேம்பாட்டுத்‌திட்டம்‌ (நீட்ஸ்‌) மற்றும்‌ பிரதமரியின்‌ வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ திட்டம்‌ (பி.எம்‌.இ.ஜி.பி) ஆகிய திட்டங்கள்‌ செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டங்கள்‌ தொடர்பான விழிப்புணர்வு கருத்தாங்கு பிரத்யேகமாக ஆதிதிராவிடர்‌, பழங்குடியினர்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு 23.03.2022 புதன்கிழமை அன்று முற்பகல்‌ 10.30 மணியளவில்‌ கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும்‌ மற்றும்‌ பிற்பகல்‌ 2.30 மணியளவில்‌ சர்க்கார்‌ சாமகுளம்‌ ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும்‌ நடைபெறவுள்ளது.

தகுதிவாய்ந்த தொழில்‌ முனைவோர்கள்‌ புகைப்படம்‌, மாற்றுச்சான்றிதழ்‌, சாதிச்சான்றிதழ்‌, குடும்ப அட்டை, ஆதார்‌ அட்டை விலைப்பட்டியல்‌ மற்றும்‌ திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களுடன்‌ வரும்பட்சத்தில்‌ இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பம்‌ பதிவேற்றப்பட்டு கடன்‌ திட்ட விண்ணப்பம்‌ உடனடியாக வங்கிக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌.

ஆகவே, புதிய தொழில்‌ துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில்‌ கலந்து கொண்டு பயன்பெறுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்‌ அழைப்பு விடுத்துள்ளார்‌.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...