பில்லூர்‌ மற்றும் சிறுவாணி நீரினை பகிர்ந்து அவற்றின் விநியோகப்‌ பகுதிகள்‌ இரண்டிலும்‌ சீரான இடைவெளியுடன்‌ விநியோகிக்க நடவடிக்கை..!

மேலும், பொதுமக்கள்‌ குடிநீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி ஒத்துழைப்பு நல்குமாறு மாநகராட்சி ஆணையர்‌ வேண்டுகோள்.


கோவை: பில்லூர்‌ மற்றும் சிறுவாணி நீரினை பகிர்ந்து அவற்றின் விநியோகப்‌ பகுதிகள்‌ இரண்டிலும்‌ சீரான இடைவெளியுடன்‌ விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று வருடங்களாக கேரளா நீர்ப்பாசனத்துறை அணை பாதுகாப்பு காரணமாக என்று கூறி சிறுவாணி அணை முழு கொள்ளளவு அடைய அனுமதிப்பதில்லை.

அதிலும்‌ குறிப்பாக கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில்‌ அணையிலிருந்து அதிகப்படியான நீரினை சிறுவாணி ஆற்றில்‌ திறந்துவிட்டு அணையின்‌ நீர் மட்டத்தை மிக கணிசமாக குறைத்துள்ளது.

இது குறித்து தமிழக முதலமைச்சர்‌ 01.02.2022 நாளன்று கேரளா முதலமைச்சருக்கு கடிதம்‌ எழுதியுள்ளார். எனினும்‌, அணையில்‌ நீர்மட்டம்‌ குறைந்த காரணத்தினால்‌ சிறுவாணி அணையிலிருந்து குகைவழிப்பாதை வழியாக நாளொன்றுக்கு வரும்‌ நீரின்‌ அளவு மிகவும்‌ குறைந்துள்ளது.

அதனால்‌ திட்டத்தை இயக்கி பராமரித்து வரும்‌ தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியம்‌ நாளொன்றுக்கு வழங்க வேண்டிய நீரின்‌ அளவு 90 மில்லியன்‌ லிட்டருக்கு பதிலாக 60 மில்லியன்‌ லிட்டருக்கும்‌ குறைவாகவே வழங்கி வருகிறது.

இதனால்‌, சிறுவாணி விநியோக பகுதிகளில்‌ குடிநீர்‌ விநியோக நாட்கள்‌ இடைவெளி அதிகமாகியுள்ளது. இதனை நேர்‌ செய்யும்‌ பொருட்டு பில்லூர் குடிநீர் திட்டத்தில்‌ கூடுதல்‌ நீருந்திகள்‌ பயன்படுத்தி கூடுதலாக நீரெடுக்கப்பட்டு வருகிறது.

இதன்‌ மூலம்‌, பில்லூர்‌ நீரினை சிறுவாணி பகுதியுடன்‌ பகிர்ந்து பில்லூர்‌ மற்றும்‌ சிறுவாணி விநியோகப்‌ பகுதிகள்‌ இரண்டிலும்‌ ஒரே மாதிரி சீரான இடைவெளியுடன்‌ விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அடுத்து வரும்‌ மழைக்காலம்‌ வரை பில்லூர்‌ மற்றும்‌ சிறுவாணி நீர்‌ பயன்பாட்டு பகுதிகள்‌ அனைத்துக்கும்‌ குடிநீர் இடைவெளி காலத்தைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும்‌ மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

மேலும், பொதுமக்கள்‌ குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைப்பு நல்குமாறு மாநகராட்சி ஆணையர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...