ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க நவம்பர் 30ஆம் தேதி கடைசி நாள்

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க நவம்பர் 30ஆம் தேதி கடைசி நாள் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள சுமார் 2 கோடி குடும்ப அட்டைகளின் ஆயுட்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடிகிறது. 

இந்நிலையில், அடுத்த ஆண்டு 2017ம் ஆண்டு முதல் புதிய ரே‌ஷன் கார்டு ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ரே‌ஷன் கடைகளில் ஆதார் எண் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 87 சதவீதம் இந்த பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, ரேஷன் கார்டுகளில் ஆதார் எண்ணை சேர்க்காவிட்டால் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ’குடும்பதாரர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள கடைகளுக்குச் சென்று குடும்ப அட்டையில் முழுமையாக விவரங்களை பெற்று வருகிற 30ம் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுத்து அதன் முழு விவரத்தையும் தெரிவிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...