புத்தாண்டு கொண்டாட்டம்: கோவையில் விதி மீறுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்

கொரோனா தொற்று பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதி மீறுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கொரோனா தொற்று பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதி மீறுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நோய்த் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2022-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில் சாலைகள், பூங்காக்கள், போன்ற பொது இடங்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், இது போன்ற இதர இடங்களில் 31.12.2021-அன்று இரவு பொதுவாக நடத்தப்படும்.

ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. கூட்டம் கூடி புத்தாண்டு கொண்டாட்டங்கள் செய்யும் பட்சத்தில் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது நோய்த் தொற்றானது அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும் சில வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்கள் மூலம் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றானது தற்போது மீண்டும் பரவி வருகின்ற சூழ்நிலையில், நோய்த் தடுப்புப் பணிகளை மேலும் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

எனவே, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உணவகங்கள் தங்கும் விடுதிகள் கேளிக்கை விடுதிகள் மற்றும் இதர இடங்களில் 31.12.2021-அன்று இரவு நடத்தப்படும் 2022-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே வைரஸ் தொற்றை கருத்தில் கொண்டு பொதுமக்கள் கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் மேற்படி நடைமுறைகள் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-இன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...