கோவை மாநகரில் 12-இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம்

கோவை மாவட்டத்தில் 12-இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம் செய்து கோவை மாநகர கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் 12-இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம் செய்து கோவை மாநகர கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

நீலகிரி மாவட்ட கொலக்கம்பை இன்ஸ்பெக்டர் யசோதா தேவி கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இடம் மாற்றப்பட்டார். மேட்டூர் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி கோவை ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டராகவும், இங்கு பணிபுரிந்த பிரபுதாஸ் கடைவீதி இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் கொளத்தூர் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் போத்தனூர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டராகவும், இங்கு பணிபுரிந்த ஆனந்த் சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இங்கு பணிபுரிந்த ரேணுகாதேவி கோவை கோவை மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சேலம் இரும்பாலை மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் கோவை செல்வபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புறநகர் பகுதி இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் சரவணம்பட்டி இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் குனியமுத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆகவும், இங்கு பணிபுரிந்த வேல்முருகன் கோவை கிழக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டம் மேச்சேரி இன்ஸ்பெக்டர் சசிகலா வெரைட்டி ஹால் ரோடு இன்ஸ்பெக்டராகவும், திருப்பூர் நகர இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி குனியமுத்தூர் குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரித்து குமார் பிறப்பித்துள்ளார்.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...