கேரளாவிலிருந்து நீலகிரிக்கு கோழிகளை கொண்டுவர தடை- மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கேரளாவிலிருந்து நீலகிரிக்குக் கோழிகள் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களைக் கொண்டுவரத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டு உள்ளார்.


நீலகிரி: கேரளாவிலிருந்து நீலகிரிக்குக் கோழிகள் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களைக் கொண்டுவரத் தடை விதித்து ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டு உள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அம்ரித் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நீலகிரி மாவட்ட எல்லை மாநிலமான கேரளா ஆலப்புழா, கோட்டயம் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. நீலகிரியில் பரவலைத் தடுக்க கேரளா மற்றும் கர்நாடகா மாநிலத்திலிருந்து கோழிகள் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை வாகனங்களில் கொண்டு வருவதைக் கண்காணிக்க 8-சோதனை சாவடிகளில் ஒரு கால்நடை உதவி மருத்துவர் தலைமையில் குழுவினர் காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறையுடன் இணைந்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பறவைக்காய்ச்சல் கோழி, வாத்து, வான்கோழி, வனப்பறவைகளை தாக்கும். மனிதரையும் தாக்கக்கூடியது. பறவை காய்ச்சல் பரவாமல் இருக்கப் பண்ணையாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

வனப்பறவைகள் பண்ணைக்குள் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வாத்து, வான்கோழி முதலிய பல்வேறு இன பறவைகளை ஒரே பண்ணையில் வைத்து வளர்க்கக்கூடாது. வெளியாட்கள், வாகனங்கள், மற்றும் விலங்குகளைப் பண்ணைக்குள் நுழையக்கூடாது. உபகரணங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடாது. உபகரணங்கள் மாதம் இருமுறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அசாதாரண இறப்புகள் இருந்தால் உடனடியாக கால்நடை மருத்துவருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

நன்கு சமைத்த கோழிக்கறி மற்றும் முட்டைகளை உண்பதால் பரவாது. சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் மட்டுமே நோய் வராமல் தடுக்க முடியும். எனவே கேரளா மற்றும் கேரள எல்லையை ஒட்டி உள்ள கர்நாடக மாநில பிற பகுதிகளில் இருந்து கோழிகள், பறவைகள் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை நீலகிரி மாவட்டத்துக்குள் கொண்டு வர தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே கூடலூர் பகுதியில் உள்ள கர்நாடகா- கேரளா மாநில எல்லைகளில் கால்நடை பராமரிப்புத் துறையினர் வெளி மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களுக்குக் கிருமிநாசினி தெளித்து வருகிறார்கள்.

கூடலூர்- கர்நாடக எல்லையான கக்கநல்லா சோதனைச் சாவடியில் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குனர் பகவத்சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...