தமிழகத்தில் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர்கள் இடமாற்றம்

தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் தொடர்ந்து 3-ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, தமிழகம் முழுவதும் மின்வாரியத்தில் பணியாற்றி வந்த 38-மேற்பார்வைப் பொறியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.


கோவை: தமிழகம் முழுவதும் மின்வாரியத்தில் பணியாற்றி வந்த 38 மேற்பார்வைப் பொறியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று தமிழகம் முழுவதும் மின்வாரியத்தில் பணியாற்றி வந்த 38 மேற்பார்வைப் பொறியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அதில், கோவை மின்வாரிய மாநகர் வட்ட மேற்பார்வைப் பொறியாளராக பணியாற்றி வந்த கே.குப்புராணி, கோவை தெற்கு வட்ட மேற்பார்வைப் பொறியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை தெற்கு வட்ட மேற்பார்வைப் பொறியாளராகப் பணியாற்றிய ஸ்டாலின்பாபு, திருப்பூர் வட்ட மேற்பார்வைப் பொறியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை வடக்கு வட்ட மேற்பார்வைப் பொறியாளராகப் பணியாற்றிய ஏ.தமிழ்ச்செல்வி, உடுமலை வட்ட மேற்பார்வைப் பொறியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உடுமலை வட்ட மேற்பார்வைப் பொறியாளராக பணியாற்றிய எஸ்.விஸ்வநாதன், கோவை வடக்கு வட்ட மேற்பார்வைப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் வட்ட மேற்பார்வைப் பொறியாளராக பணியாற்றிய ஜவஹர், திருவலம் வட்ட மேற்பார்வைப் பொறியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பல்லடம் வட்ட மேற்பார்வைப் பொறியாளராக பணியாற்றிய சுப்ரமணி, திண்டுக்கல் வட்ட மேற்பார்வைப் பொறியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை வட்ட மேற்பார்வைப் பொறியாளராக பணியாற்றிய சகாயராஜ், பல்லடம் வட்ட மேற்பார்வைப் பொறியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோபி வட்ட மேற்பார்வைப் பொறியாளராக பணியாற்றிய நேரு, கள்ளக்குறிச்சி வட்ட மேற்பார்வைப் பொறியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி வட்ட மேற்பார்வைப் பொறியாளராக பணியாற்றிய அருட்பெருஞ்ஜோதி கோபி வட்ட மேற்பார்வைப் பொறியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...