கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உடனே ரேஷன் கார்டு-தமிழக அரசு உத்தரவு.!!

தமிழகத்தில் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் தனி ரேஷன் கார்டு பெற குடும்பத் தலைவரின் அனுமதி பெறத் தேவையில்லை என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


கோவை: தமிழகத்தில் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் தனி ரேஷன் கார்டு பெற குடும்பத் தலைவரின் அனுமதி பெறத் தேவையில்லை என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதிய குடும்ப அட்டை கோரும் போது விவாகரத்து போன்ற ஆவணங்களைச் சமர்ப்பிப்பது அவசியம். அதனால் பலருக்கும் சிரமமாக இருந்தது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தனி ரேஷன் கார்டு பெறுவதற்கு குடும்பத் தலைவரின் அனுமதி பெற அவசியமில்லை என்று தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு எந்த ஒரு ஆவணங்களையும் கேட்க வேண்டாம் என்று சார்நிலை அலுவலர்களுக்கு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...