உதகை - மேட்டுப்பாளையம் மலை ரயில் போக்குவரத்து அக்., 18ம் முதல் மூன்று நாட்கள் ரத்து : தெற்கு ரயில்வே அறிவிப்பு

நீலகிரி : தொடர் மழையால் மலை ரயில் பாதையில் அடிக்கடி மண்சரிவு ஏற்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை மலை ரயில் வரும் அக்டோபர் 18ம் தேதி முதல் மூன்று நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதே நேரத்தில் குன்னூர் - உதகை இடையேயான மலை ரயில் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நீலகிரி : தொடர் மழையால் மலை ரயில் பாதையில் அடிக்கடி மண்சரிவு ஏற்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை மலை ரயில் வரும் அக்டோபர் 18ம் தேதி முதல் மூன்று நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதே நேரத்தில் குன்னூர் - உதகை இடையேயான மலை ரயில் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நாள்தோறும் உதகைக்கு மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. மலைகளின் நடுவே பயணிக்கும் பாரம்பரியமிக்க நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த மலைரயிலில் சென்று இயற்கை அழகினை ரசிக்க உள்நாடுகள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்து மலை ரயிலில் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு சென்ற மலை ரயில், பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மீண்டும் மேட்டுப்பாளையம் வர இயலாமல் உதகையிலேயே நிறுத்தப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனிடையே, நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மலை ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்டோபர் 18ம் தேதி முதல் அக்டோபர் 20ம் தேதி வரை மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் போக்கு வரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால், முன்பதிவு செய்து காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...