திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாரத்தான் போட்டி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (13- 10 -19) மாரத்தான் போட்டி நடைபெறுவதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே. விஜயகார்த்திகேயன் முகநூல் வாயிலாக பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


திருப்பூர் : திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (13- 10 -19) மாரத்தான் போட்டி நடைபெறுவதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே. விஜயகார்த்திகேயன் முகநூல் வாயிலாக பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இப்போட்டியானது அக்டோபர் 13ஆம் தேதி காலை 5:45 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி மீண்டும் அங்கேயே முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாரத்தான் போட்டி இரண்டு பிரிவாக 13 வயதுக்கு உட்பட்டவர்கள் 3 கிலோமீட்டர் நடை பயணத்திலும், 13 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பத்து கிலோமீட்டர் போட்டியிலும் கலந்து கொள்ளலாம். 

மேலும், இந்த மாரத்தான் போட்டி மூலம் பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பு, நீர் மேலாண்மை விழிப்புணர்வு குறித்த விளக்க உரைகளும், நெகிழி இல்லா திருப்பூர் குறித்த விளக்க உரைகளும், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 

இந்த மாரத்தான் போட்டி மூலமாக பொதுமக்கள் அனைவரும் தினமும் உடற்பயிற்சி செய்து தங்கள் உடல்நலனை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதும் எடுத்துரைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

ஆதலால், பொதுமக்கள் அனைவரும் தவறாமல் இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே விஜயகார்த்திகேயன் பொதுமக்களுக்கு முகநூல் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.

பங்குகொள்ள விரும்புவோர் கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் : 

9840270004 ; 9791160004 ; 9840760004.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...