விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு கடந்த செப் 2ம் தேதியன்று மாவட்டம் முழுவதும் இந்து மதத்தினர் சார்பிலும், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஷ்வ இந்து பரிஷத் மற்றும் ஹனுமன் சேனா உள்ளிட்ட அமைப்பினர் சார்பிலும் விநாயகர் சிலைகள் ஆங்காங்கே நிறுவப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு கடந்த செப் 2ம் தேதியன்று மாவட்டம் முழுவதும் இந்து மதத்தினர் சார்பிலும், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஷ்வ இந்து பரிஷத் மற்றும் ஹனுமன் சேனா உள்ளிட்ட அமைப்பினர் சார்பிலும் விநாயகர் சிலைகள் ஆங்காங்கே நிறுவப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி நாளினைத் தொடர்ந்து மூன்றாம் நாள் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அதன்படி, இன்று கோவையில் ஒரு சில பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்து முன்னணி, பாரத் சேனா, அனுமன் சேனா, விஷ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகளின் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலமானது 1 மணிக்கு குனியமுத்தூர் தர்மராஜா கோயிலிருந்து புறப்பட்டு குனியமுத்தூர் பாலக்காடு சாலை வழியாக குனியமுத்தூர் குளத்தில் கரைக்கப்படுவதாலும், 2 மணிக்கு போத்தனூர் சாரதா மில் ரோட்டில் ஆரம்பித்து குறிச்சி சங்கம் வீதியில் ஒன்றுகூடி சுந்தராபுரம் வழியாக பொள்ளாச்சி ரோட்டில் சென்று குறிச்சி குளத்தில் கரைக்கப்படுவதை முன்னிட்டும், பொதுமக்கள் நலன்கருதி கீழ்க்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
1, விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு 04.09.2019 அன்று மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் லாரிகள் இயக்க தடை விதிக்கப்படுகிறது
2. மதியம் 1 மணி முதல் பாலக்காடு ரோட்டிலிருந்து உக்கடம் நோக்கி வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் கோவைப்புதூர் பிரிவிலிருந்து இடதுபுறம் திரும்பி குளத்துப் பாளையம் வழியாக ஆஸ்ரம் பள்ளி சந்திப்பு வந்து வலது புறம் திரும்பி புட்டுவிக்கி சாலை வழியாக உக்கடம் வந்து செல்லவேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.
3. மதியம் 2 மணி முதல் உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி செல்லக்கூடிய வாகனங்கள் குறிச்சி பிரிவிலிருந்து போத்தனூர் கடைவீதி, இரயில் கல்யாண மண்டபம், போத்தனூர் , புதுப்பாலம், ஜீ.டி.டேங்க், செட்டிபாளையம் சாலை வழியாக சென்று பொள்ளாச்சி சாலையை அடைந்து செல்லவேண்டிய இடங்களுக்குச் செல்ல வேண்டும்.
4. மதியம் 1 மணி முதல் உக்கடத்திலிருந்து குனியமுத்தூர் மற்றும் பாலக்காடு செல்லும் வாகனங்கள் பேருர் பைபாஸ் ரோடு, சேதுமாவாய்கால் செக்போஸ்ட் வழியாக புட்டுவிக்கி ரோடு வையாபுரி பள்ளி சந்திப்பில் இடதுபுறம் திரும்பாமல் நேராக கோவைபுதூர் ஆஸ்ரம் பள்ளி சந்திப்பு சென்று குளத்துப்பாளையம் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல வேண்டும்.
5. பொள்ளாச்சி சாலையிலிருந்து சுந்தராபுரம் வழியாக பாலக்காடு ரோடு செல்லும் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் எல் & டி பைபாஸ் சாலை வழியாக வந்து மதுக்கரை மார்கெட் சாலையை அடைந்து மதுக்கரை மார்கெட் ரோடு வழியாக வந்து பிள்ளையார்புரம் சந்திப்பில் இடது பக்கம் திரும்பி சுகுணாபுரம் வந்து பழக்கடை சாலையை அடைந்து செல்லவேண்டிய இடங்களுக்குச் செல்ல வேண்டும்.
6. பொள்ளாச்சி சாலையிலிருந்து சுந்தராபுரம் வழியாக உக்கடம் செல்லும் இலகுரக வாகனங்கள் ஈச்சனாரி பிரிவிலிருந்து வலது பக்கம் திரும்பி ஈச்சனாரி செட்டிபாளையம் சாலையை அடைந்து இடது பக்கம் திரும்பி ஜீ.டி. டேங்க், போத்தனூர் புதுப்பாலம் வழியாக போத்தனூர் கடைவீதி, குறிச்சி பிரிவு வந்து ஆத்துப்பாலம் வழியாக உக்கடம் செல்லவேண்டும்.
7, பொள்ளாச்சியிலிருந்து கோவை மார்க்கமாக வரும் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு நகருக்குள் அனுமதியில்லை அவை அனைத்தும் எல் & டி பைபாஸ் சாலையில் தான் செல்லவேண்டும்.
மேலே கண்ட சாலைகள் வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல இருப்பதால் ஊர்வலப்பாதையில் இருக்கும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை மேற்படி பாதையில் நிறுத்துவதை தவிர்த்து மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.