கோவை : கோவை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வசித்து வருபவர்கள் வரும் 31-ம் தேதிக்குள் குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டம் பொது விநியோகத்திட்டம், மின்னணு குடும்ப அட்டைகளில் ஆதார் பதிவு செய்வது தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டையில் ஆதார் இணைத்து பதிவு செய்யாமல் 24,911 பேர் உள்ளனர். யு.ஐ.டி.ஏ.ஐ. திட்டத்தின் கீழ் பிறந்த குழந்தைகள் மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் மையத்திலும், குறிப்பிட்ட தபால் நிலையங்களிலும், வங்கி கிளைகளிலும் ஆதார் எடுத்து தரப்பட்டு வருகிறது.
எனவே, ஆதார் எடுத்தும், அதனை மின்னணு குடும்ப அட்டையில் இணைக்காதவர்கள் அவரவர் எல்லைக்குட்பட்ட குடிமைப் பொருள் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.50 மணி வரை வேலை நாட்களில் ஆதார் அட்டை, மின்னணு குடும்ப அட்டை ஆகியவற்றை கொண்டு சென்று பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வரும் 31-ம் தேதிக்குள் மின்னணு குடும்ப அட்டைகளில் ஆதார் பதிவுகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.