கோவை : நாளை கொண்டாடப்படும் சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் பொதுவிநியோகப் பொருட்களின் கணக்குகள் பொதுமக்களின் முன்னிலையில் சமூக தணிக்கை நடைபெறுவதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;-கோவை மாவட்டத்திலுள்ள கிராம ஊராட்சிகளில் எதிர்வரும் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் தொடர்புடைய ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட நியாய விலை அங்காடிகளின் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் குறித்த அனைத்து வித கணக்குகள் சமூகத் தணிக்கைக்கு முன்னிலைப்படுத்தப்பட உள்ளன. பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாட்டிலும் நியாயவிலை அங்காடிகளின் செயல்பாட்டிலும் வெளிப்படையான நடைமுறையைக் கொண்டு வரும் வகையில் செயல்படுத்தப்படும் சமூகத் தணிக்கையினால் பொதுமக்களின் குறைகள் பதியப்பட்டு குறைகள் களைந்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, பொதுமக்கள் பெருந்திரளாக மேற்படி சமூகத் தணிக்கையில் கலந்து கொண்டு பொது விநியோகத் திட்டம் தொடர்பான தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெற்றிடுமாறும், மேலும் இத்திட்டம் சிறந்த முறையில் செயல்பட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்திடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.