கோவை : நிலம் பாத்தியப்பட்ட கிராமத்தில் குடியில்லாத விவசாயிகள், தங்களுக்கு பாத்தியப்பட்ட நிலம் உள்ள கிராமத்திலுள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று உரிய ஆவணங்களை சமர்பித்து பயனாளிகளாக இணைய மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மத்திய அரசு, சிறு மற்றும் குறு விவசாயிகளின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்னும் திட்டத்தை கொண்டு வந்தது. தற்போது இத்திட்டத்தின் கீழ் நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளும் பயன் பெற தகுதி உள்ளவர்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளின் குடும்பங்களுக்கு வருடந்தோறும் ரூ. 6,000 (அதாவது ரூ.2,000/- வீதம் மூன்று தவணைகளில் மொத்தம் ரூ.6000) நிதி உதவி வழங்கப்படும். இந்த நிதி பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் அனைத்து சிறு, குறு. நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் தகுதியுடையவர்கள் ஆவர்.
இத்திட்டத்தின் கீழ் அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளின் குடும்பங்களை பயனாளிகளாக கணக்கெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மேற்படி நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் சில கிராமங்களில் நிலம் உடைய விவசாயிகள் சம்பந்தப்பட்ட கிராமத்தில் வசிப்பதில்லை என்பது தெரிய வருகிறது. இவ்வாறான பட்டாதாரர்கள் எங்கே வசிக்கிறார்கள் என்ற விவரம் சரிவர தெரியாததால், இவர்களிமிருந்து ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்களை பெற்று இவர்களை கணக்கெடுக்கும் பணிகளில் பயனாளிகளாக சேர்க்க இயலுவதில்லை.
இவ்வாறு நிலம் பாத்தியப்பட்ட கிராமத்தில் குடியில்லாத விவசாயிகள் தங்களுக்கு பாத்தியப்பட்ட நிலம் உள்ள கிராமத்திலுள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று, தங்களின் பட்டா விவரம், ஆதார் எண், குடும்ப அட்டை எண், வங்கிக்கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்து இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.