கோவை : தொழில் தொடங்க விழையும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசின் வேலைவாய்ப்பு உருவாக்கும் (யூ.ஒய்.இ.ஜி.பி.) திட்டத்தின் கீழ் கடன் பெற மாவட்ட தொழில் மையம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடத்தப்படவுள்ள ஊக்குவிப்பு முகாமில் கலந்து கொண்டு திட்டம் குறித்த தகவல்கள் அறிந்து பயன்பெறலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :- தமிழகத்தின் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் யூ.ஒய்.இ.ஜி.பி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில்களை அதிகபட்சம் ரூ. 10 லட்சம் முதலீட்டிலும், சேவைத் தொழில்களை அதிகபட்சம் ரூ. 3 இலட்சம் முதலீட்டிலும், வியாபார தொழில்களை அதிகபட்சம் ரூ.1 லட்சம் முதலீட்டிலும் தொடங்கலாம். மேற்கண்ட மனுதாரர்களுக்கு மாநில அரசால் 25% மானியம் அதிகபட்சமாக ரூ. 1,25,000 வழங்கப்படும். 5 % சுய முதலீடு அவசியம்.
இத்திட்டத்தின்கீழ் தொழில் தொடங்க 18 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1,50,000-த்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இக்கடன்கள் பெறுவதற்கு சொத்துப்பிணையம் தேவையில்லை. மேலும், இத்திட்டத்தில் விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகவும், சிறப்பு பிரிவினருக்கு 45 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் குறைந்தது 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த ஆண்டு இத்திட்டத்தின்கீழ் 295 நபர்கள் ரூ. 175 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ. 600 லட்சம் முதலீட்டில் தொழில் துவங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டம் தொடர்பான தகவல்கள் வழங்கும் ஊக்குவிப்பு முகாம் கீழ்கண்டவாறு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காலை 11 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறவுள்ளது.
1. ஆக., 06-ம் தேதி - ஊராட்சி ஒன்றிய அலுவலகம் - சர்கார் சாமகுளம் |
2. ஆக., 08-ம் தேதி - ஊராட்சி ஒன்றிய அலுவலகம் - பெரிய நாயக்கன்பாளையம்
3. ஆக., 20-ம் தேதி - ஊராட்சி ஒன்றிய அலுவலகம் - தொண்டாமுத்தூர்
4. ஆக., 21-ம் தேதி - ஊராட்சி ஒன்றிய அலுவலகம் - கிணத்துக்கடவு
5. ஆக., 27-ம் தேதி - ஊராட்சி ஒன்றிய அலுவலகம் - சுல்தான்பேட்டை
6. ஆக., 29-ம் தேதி - ஊராட்சி ஒன்றிய அலுவலகம் - காரமடை
7. ஆக., 30-ம் தேதி - ஊராட்சி ஒன்றிய அலுவலகம் - மதுக்கரை
8. செப்., 04-ம் தேதி - ஊராட்சி ஒன்றிய அலுவலகம் - அன்னூர்
9. செப்., 06-ம் தேதி - ஊராட்சி ஒன்றிய அலுவலகம் - பொள்ளாச்சி வடக்கு
10. செப்., 17-ம் தேதி - ஊராட்சி ஒன்றிய அலுவலகம் - ஆனைமலை
11. செப்., 19-ம் தேதி - ஊராட்சி ஒன்றிய அலுவலகம் - சூலூர்
12. செப்., 24-ம் தேதி - ஊராட்சி ஒன்றிய அலுவலகம் - பொள்ளாச்சி தெற்கு
தாங்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெற தாங்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கல்வித் தகுதிச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை இல்லாதவர்கள் தாசில்தாரிடம் பெறப்பட்ட இருப்பிட சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இயந்திரத்திற்கான விலைப் புள்ளி, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களின் அசல் மற்றும் 2 நகல்களுடன் கலந்து கொள்ளலாம். இவ்வரிய வாய்ப்பினை படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்தி புதிய தொழில்கள் துவங்கி பொருளாதார ஏற்றம் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.