ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வால்பாறை கல்லூரி மாணவர்கள்

வால்பாறையில் பாரதியார் பல்கலைக் கழகத்தால் செயல்பட்டுவரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டம் குறித்து கவனம் செலுத்தாமல் உள்ள மத்திய, மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் கல்லூரி வளாகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 





இதில் "தடை செய் தடை செய் பீட்டா அமைப்பை தடை செய்", "அனுமதி கொடு அனுமதி கொடு ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கொடு" போன்ற முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கூறுகையில், தமிழர்களின் பண்பாட்டை சீர்குலைக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஜல்லிக்கட்டை தடை செய்துள்ளது. இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 

உடனடியாக மத்திய, மாநில அரசுகள் அவசர சட்டம் இயற்றி பீட்டா அமைப்பை தடை செய்வதோடு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியும் வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். 

இது குறித்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வழங்கும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் அவர்கள் கூறினர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...