பெப்சி, கோக் உள்ளிட்ட பன்னாட்டு குளிர்பானங்களை சாலையில் கொட்டி கோவை மாணவர்கள் போராட்டம்

கோவை அருகே ஐல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெப்சி, கோக் உள்ளிட்ட பன்னாட்டு குளிர்பானங்களை சாலையில் கொட்டியும், உடைத்தும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொளுத்தும் வெயில், கொட்டும்பனி உள்ளிட்டவற்றை பொருட்படுத்தாமல் இரவு- பகலாக கோவை வஉசி மைதானத்தில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 3வது நாளாக இன்று 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அமைதி போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதன் காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதால் போராட்டக் களத்தில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனிடையே, இன்று கோவையில் நடைபெற்று வரும் போராட்டக்களத்திற்கு வந்த திரைப்பட இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஐல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் நடத்தினார்.

தமிழின அடையாளத்தை பாதுகாக்கும் வகையில் போராட்டத்தில் நடந்து வரும் இளைஞர்களின் போராட்டம், ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வரும் வரை தொடருமென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து இளைஞர்கள் வஉசி மைதானத்தில் திரண்டு வருவதால் கோவை - அவிநாசி சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது. 

இதனிடையே, கோவையை அடுத்த திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்க குளிர்பானங்களான பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்களை சாலையில் கொட்டியும், உடைத்தும் போராட்டம் நடத்தினர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...