தமிழக மக்களின் கோரிக்கையை மத்திய அரசு உடனே கவனிக்கும் என்பதில் பொங்கல் விடுமுறையால் தெளிவாகியுள்ளது என தமிழிசை தகவல்


பொங்கல் பண்டிகை பொது விடுமுறை தின பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், தமிழர்கள் மத்திய அரசால் உதாசீனப்படுத்தப்படுவதோ புறக்கணிக்கப்படுவதோ இல்லை என்பதும் அவர்களது கோரிக்கை உடனே கவணிக்கப்படும் என்பது தற்போது தெளிவு படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக பாஜகவின் அழுத்தம் காரணமாகவே மத்திய அரசு பொங்கலை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது என்றும், நேற்றைய தினம் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம் இதுகுறித்து பேசி அழுத்தம் தந்ததாகவும் குறிப்பிட்டார். 

தமிழர்கள் உதாசீனப்படுத்தப்படுவதோ புறக்கணிக்கப்படுவதோ இல்லை என்பதும், அவர்களது கோரிக்கை உடனே கவணிக்கப்படும் என்பதும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது எனவும், மக்கள் பிரச்சனையில் பாஜக என்றுமே தமிழகத்திற்கு எதிராக இருக்காது என்றும் சுட்டிக்காட்டினார். 

மேலும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்தால் மட்டும் போதாது எனவும், விவசாயிகளின் அடிப்படை தேவைகளை அறிந்து ஆறுகளை தூர் வாருதல், மணல் அள்ளுவதை தடுத்தல் மற்றும் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துதல் போன்றவற்றிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

பொங்கல் விடுமுறை என்பது 15 ஆண்டு காலமாக சிறப்பு பட்டியலில் தான் இருப்பதாகவும், புதிதாக எந்த அதிகாரப்பூர்வ பட்டியலில் இருந்தும் நீக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...