தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து உடனடியாக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

தமிழகத்தில் வறட்சி ஆய்வு பணிகள் கண் துடைப்பிற்காக நடப்பதாகவும், தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து ஒரு வார காலத்திற்குள் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி, விவசாயிகள் காய்ந்த தேய்காய்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வந்த விவசாயிகள், தமிழகம் வறட்சியின் கோர பிடியில் சிக்கி தவித்து வருவதால் கடந்த சில நாட்களில் மட்டும் 128 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். ஆனால் விவசாயிகள் வறட்சியினால் தான் உயிரிழந்து இருப்பதாக தமிழக அரசு ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை என குற்றம்சாட்டினர். 

மேலும், கோவை மாவட்டத்தில் தென்னை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறிய விவசாயிகள், வறட்சி ஆய்வு பணிகள் கண் துடைப்பிற்காக நடத்தப்படுவதாகவும், ஆய்வு பணிகள் முறையாக நடக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர். 

வறட்சி ஆய்வு பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டுமெனவும், தமிழகத்தை உடனடியாக வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து போர்க்கால அடிப்படையில் விவசாயிகளுக்கு ஒரு வார காலத்திற்குள் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர். 

மேலும், ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு, மரணமடைந்த விவசாயிகள் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...