இளம்பெண்ணை கொலை செய்து தலைமறைவான வடமாநில தொழிலாளி- காவல்துறை தீவிர விசாரணை


கோவை அருகே தனியார் நூற்பாலையில் தங்கியிருந்து இளம்பெண்ணை கொலை செய்து தப்பியோடிய வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம், சூலூர் அருகே நடுப்பாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் தனியார் நூற்பாலை நடத்திவருகிறார். இவரது நூற்பாலைக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அஸ்ஸாமைச் சேர்ந்த சிராஜுதீன் மகன் அப்துல் ஜாபர் (21) கும்பகோணத்தைச் சேர்ந்த இந்து (20) என்பவருடன் வந்து வேலைக்கு சேர்ந்துள்ளார். இவர்கள் இருவரும் கனவன் மனைவி என கூறியுள்ளனர். 

இவர்கள் இருவரும் நூற்பாலையின் அறையில் தங்கியிருந்த நிலையில், திங்களன்று காலை இருவரும் பணிக்கு வராததால் பணியாளர் ஒருவர் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றுள்ளார். 

அப்போது, இந்து துப்பட்டாவில் கழுத்தை இறுக்கி கொல்லப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்ட பணியாளர் நூற்பாலையின் உரிமையாளர் செல்வராஜிடம் இந்து பிணமாகக் கிடப்பதை கூறியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து சூலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டதைத் தொடர்ந்து, கருமத்தம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அங்கு வந்த சூலூர் காவல் துறையினர் மற்றும் தடய அறிவியல் துறை நிபுணர்கள் அப்துல் ஜாபர், இந்து தங்கியிருந்த அறையில் சோதனை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக இந்துவின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், தலைமறைவான இந்துவுடன் இருந்த அப்துல் ஜாபரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...