மாநகராட்சி ஆணையர் உத்தரவால் அதிக கட்டணம் வசூலித்த நவீன கட்டண கழிப்பிட குத்தகைதாரர்க்கு அபராதம்

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மத்திய மண்டலத்திற்குட்பட்ட அரசு பொது மருத்துவமணை எதிரில் செயல்பட்டு வரும் நவீன கட்டண கழிப்பிடத்திற்கு அதிக கட்டணம் வசூல் செய்த குத்தகைதாரர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில், உதவி வருவாய் அலுவலர் தலைமையில் மத்திய மண்டலத்திற்குட்பட்ட 73-வது வார்டு திருச்சி சாலை, அரசு பொது மருத்துவமணை எதிரில் செயல்பட்டு வரும் மாநகராட்சி நவீன கட்டண கழிப்பிடத்தில் கடந்த டிசம்பர் 23ம் தேதியன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் போது, குத்தகைதாரர் வி.கே.ரஹமதுல்லா என்பவரின் வசூல் செய்யும் பணியாளர்கள் ஏல விதிமுறைப்படி மாநகராட்சி நவீன கட்டண கழிப்பிடத்தின் ரூ.1 கட்டணம் வசூல் செய்யாமல், அதற்கு பதிலாக ரூ.3 கூடுதல் கட்டணம் வசூல் செய்தது ஆய்வில் கண்டறியப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, மாநகராட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி, மாநகராட்சி பொது ஏல விதிமுறைகளை மீறி செயல்பட்ட குத்தகைதாரர் வி.கே.ரஹமதுல்லா என்பவரை இறுதியாக எச்சரிக்கை செய்து, அபராதத் தொகையாக ரூ.10,000 விதிக்கப்பட்டது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...