கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் கோவை ஷாப்பிங் திருவிழா துவக்கம்


கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள கொடிசியா வளாகத்தில் ஷாப்பிங் திருவிழா இன்று துவங்கப்பட்டது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் திறந்து வைத்தார்.

 

கொடிசியா வளாகத்தில் துவங்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் மொத்தம் 400-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இதில், கைவினைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், உடைகள், தொழில்நுட்பப் பொருட்கள் என ஏராளமானவை இடம்பெற்றுள்ளன.



இதில், மும்பையைச் சேர்ந்த சரத் மிஸ்ராவின் ஒரு கலைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கலைக் கூடம் 6 ஆண்டுகளாக கொடிசியா வளாகத்தில் நடைபெரும் ஷாப்பிங் திருவிழாவிலும் இடம் பெற்றுவருகிறது. அவரது அரங்கில் மும்பையில் தயாரிக்கப்பட்ட சிறப்பு வளை கூடைகள், சுவர் அலங்காரப் பொருட்கள், சிலைகள் என பல கைவினைப் பொருட்கள் மக்களின் பார்வைக்காகவும், விற்பனைக்காகவும் உள்ளன.



அக்கண்காட்சியில், யுனிவர்சல் லைட்ஸ் சேர்ந்த மணிகண்டன் அவர்களின் கண்காட்சிப் பொருட்களும் இடம்பெற்றுள்ளன. இவர் இக்கண்காட்சியில் பங்குபெருவது இது இரண்டாவது முறையாகும். இந்த அரங்கில், வண்ண விளக்குகள், அலங்கார விளக்குகள் என ஏராளமானவை உள்ளன. மேலும், மக்களின் விருப்பத்திற்கு தகுந்தவாரும் விளக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. 250 ரூபாய் முதல் 7500 ரூபாய் வரையுள்ள மின்சார சேமிப்பு மின் விளக்கு, எல்இடி விளக்குகள் உள்ளிட்டவை இங்கு அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. 



கோவை ஷாப்பிங் திருவிழாவில் முதன்முறையாக கோயம்புத்தூர் நியாடா கிரியேஷனில் இருந்து ஷீலா மேத்யூஸ் என்பவர் பங்கேற்றுள்ளார். இவரது கண்காட்சி அரங்கில் வீட்டின் அழகை மெருகேற்றும் அலங்காரப் பொருட்கள், சுவற்றில் அழகுக்காக தொங்கவிடப்படும் பொருட்கள், திரைச் சீலைகள் என பலப் பொருட்கள் கண்காட்சிக்காகவும், விற்பனைக்காகவும் இடம்பெற்றுள்ளன.



Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...