ஸ்வச் சர்வேக்ஷன் 2017 மற்றும் ஸ்வச்சதா செயலி குறித்து மாணவ மாணவிகளுடன் மாநகராட்சி ஆணையர் கலந்துரையாடல்


கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் ஸ்வச்சர்வேக்ஷன் 2017 மற்றும் ஸ்வச்சதா செயலி குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

கோவை மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் இன்று கோவை மாநகராட்சி ஆணையரும் தனி அலுவலருமான க.விஜயகார்த்திகேயன் பல கல்வி நிறுவனங்களில் இருந்து வந்திருந்த மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதில், ஸ்வச் சர்வேக்ஷன் 2017 மற்றும் ஸ்வச்சதா செயலி குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். 



மாணவர்களின் மூலமாக ஸ்வச் பாரத் திட்டத்தினை அதிகளவில் பொதுமக்களிடம் எடுத்துச் செல்லமுடியும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. இதன் மூலம் மாநகராட்சியுடன் மக்கள் ஒத்துழைப்பு தந்து அதிகபட்ச சுகாதாரத்தினை அடைய முடியும். இது ஸ்வச் சர்வேக்ஷன் 2017 விருதினை பெறவும் வழிவக்கும்.

மத்திய நகர்ப்புற  அமைச்சகத்தின் மூலம் ஸ்வச்பாரத் திட்டத்தின் கீழ் ஸ்வச்சர்வேக்ஷன் என்ற கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பில் சுகதார அளவுகள் மற்றும் அதற்கான உள்ளாட்சி  அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கருத்தில் கொள்ளப்படும்.

கோவை மாநகராட்சி இந்த செயலியை பயன்படுத்துவது குறித்து பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதற்காக நகரங்களில் தன்னார்வலர் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஸ்வச்சதா செயலி மூலம் மக்கள் தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடுகள் குறித்து புகார் தெரிவித்தால் 2 மணி நேரத்தில் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...