கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: ஏசுகிறிஸ்து வாழ்க்கை வரலாறு குறித்து அவினாசிலிங்கம் பல்கலை கழக மாணவிகள் நாடகம் நடத்தினர்


கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆசிரியர்கள், மாணவிகள் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடினர். இதில், ஏசு பிறப்பு உள்ளிட்ட அவரது வாழ்க்கை குறித்து நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களின் தத்ரூபமான நாடகம் அங்கிருந்தோரை வெகுவாக கவர்ந்தது.



இந்நிகழ்ச்சியில், பொருளியல் துறை பேராசிரியர் முனைவர் ஷேர்லி தாமஸ் வரவேற்புரையாற்றினார். அவினாசிலிங்கம் கல்வி நிறுவனத்தின் வேந்தர் முனைவர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் தலைமையுரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், கிறிஸ்துமஸ் விழா என்பது சாதிமத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் கொண்டாடப்படுகின்ற விழாவாக அமைகின்றது. அறியாமை, மூடநம்பிக்கை, பேராசை, வெறுப்புணர்ச்சி போன்றவைகளை அகற்றுவதற்காக தெய்வ அவதாரமாகிய ஏசுகிறிஸ்து இந்த பூமியில் அவதரித்தார் என்றும், உலகம் முழுவதும் ஆன்மீக ஒளியை பரப்புவதற்காக கிறிஸ்துமஸ் விழா இசை நிகழ்ச்சிகளுடன் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு உற்சாகமாக கொண்டாடப்படுகிறது என்றும் எடுத்துரைத்தார்.



இதைத்தொடர்ந்து, கோவை இன்டச் ஃபெல்லோசிப் இன்டர்நேசனல் முதன்மை பாஸ்டர் எம்.அருமைநாயகம் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். அப்போது மாணவர்களின் ஏசுபிறப்பு நாடகம் தத்ரூபமாகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்ததாகவும் பாராட்டு தெரிவித்தார்.



இதைத்தொடர்ந்து, அவினாசிலிங்கம் கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் முனைவர் பிரேமாவதி விஜயன் கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார். விழாவின் முக்கிய நிகழ்வாக கிறிஸ்துமஸ் தாத்தா அனைவருக்கும் பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்வித்தார். நிறைவாக பேராசிரியர் முனைவர் வசந்தகல்யாணி நன்றியுரை வழங்கினார்.





Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...