எஸ்டீ லாடர் மற்றும் பிக்கி இணைந்து மகளிருக்கான அழகுபடுத்துதல் நிகழ்ச்சி

எஸ்டீ லாடர் மற்றும் பிக்கி இணைந்து மேக்கப், தோல் பராமறிப்பு மற்றும் நறுமணம் உள்ளிட்டவை குறித்து இன்று டிசம்பர் மாத விழக்காலத்தை மனதில் கொண்டு நிகழ்ச்சி நடத்தியது. கோவை தாஜ் ஹோட்டலில் உள்ள டேங்கோ அரகில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை மிஷஸ் இந்தியா 2016 விருது பெற்ற ஜெயாமகேஷ் துவக்கி வைத்தார். இன்று காலை 9 மணியளவில் துவங்கிய இந்நிகழ்ச்சி மாலை 6 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்குபெரும் மகளிருக்கு இலவசமாக தோல் பராமறிப்பு சிகிச்சை, அழகுபடுத்துதல் உள்ளிட்டவை குறித்து இலவசமாக எடுத்துரைக்கப்பட்டு சிகிச்சைகளும் அளிக்கப்படும்.

இதுகுறித்து கோவை பிக்கி தலைவர் நமது நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பிக்கி என்பது இந்தியா முழுவதும் உள்ள ஒரு அமைப்பு ஆகும். பிக்கி மகளிர் அமைப்பு பிரிவு துவங்கி வரும் மார்ச் 2017 உடன் 25 வருடத்தை நிரைவு செய்கிறது. இவ்வமைப்பு பெண்களை ஊக்குவிக்க தனி கவணம் செலுத்தி வருகிறது. குறிப்பாக தனியார் நிறுவன பெண்களுடன் இணைந்து இவ்வமைப்பு பல நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

வருடம் முழுவதும் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இன்று நடத்தப்பட்ட நிகழ்ச்சியானது தனியார் நிறுவன பெண்களை ஊக்குவிப்பதற்காக நடத்தப்பட்டது. இன்றைய சவாலான பணிச்சூழல் நிரைந்த காலகட்டத்தில் பெண்கள் தங்களை சிறப்பாக வெளிக்காட்டிக்கொள்ள வேண்டும். இது இன்றைய காலகட்டத்தின் கட்டாயம்.

சிறந்த ஆடை அழங்காரம் பெண்களின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும்'' என்றார்.

பணிச்சூழலில் அழகு மட்டுமே போதுமானதா என்ற கேள்விக்கு "அழகு மட்டும் போதுமானதல்ல, அழகுடன் இணைந்து திறமையும் பணியில் தேவை. அழகும், திறனும் சமமாக இருக்க வேண்டும்'' என்றார். மேலும், காலை துவக்கத்தில் 50 பேர் இந்த அழங்கார நிகழ்ச்சிக்கு வந்தனர், மாலை 6 மணிக்குள் 200-க்கும் மேற்பட்டவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

பிராண்டு ஆலோசகர் மஞ்சுஷா மகேஷ்வரி கூறுகையில், இந்த நிகழ்வின் பொருள் வண்ணங்களில் இருந்து பிறந்த அழங்காரப் புரட்சி ஆகும். இந்தியர்கள் அனைவரும் அழங்காரத்திற்கான ஒரு அடிப்படையினை தெரிந்துள்ளனர். அழங்காரங்கள் வண்ணங்கள் கொண்டு அழகுபடுத்துதல், தோல்பராமறிப்பு, ஆடை அழங்காரம், புதிய தோற்றம் என பல உள்ளன. அவற்றை குறித்து பெரும்பாலானோர் தெரிந்துள்ளனர்.

இன்றைய நிகழ்வில் நாங்கள் குறிப்பாக தோல் பராமறிப்பு குறித்தும், அதிலும் குறிப்பாக இரவு நேர பராமறிப்பு குறித்தும் எடுத்துரைத்துள்ளோம். அனைவரும் பகல் நேரங்களில் அழங்காரம் செய்வதில் முனைப்பு காட்டுகின்றனர். ஆனால் இரவு நேர அழங்காரத்தில் கவணம் செலுத்துவது இல்லை. பகல் நேரத்தில் தோலில் ஏற்படும் பாதிப்புக்கு இரவு நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும். எஸ்டீ லாண்டர் இரவு நேர தோல் பராமறிப்பினை வழங்குகிறது'' என்றார்.

இன்றைய அவசர காலகட்டத்தில் பெண்கள் எப்படி அழங்காரத்திற்கு நேரம் செலுத்தமுடியும் என்று கேட்டபோது ''நாங்கள் 3 நிமிட அழங்கார சேவையை வழங்கி வருகிறோம். இதன் மூலம் ஒரே அழங்காரப் பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு அழங்காரம் செய்வது என கற்றுத்தரப்படுகிறது. அழகாக காட்சியளிப்பது நமக்கு தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் தருகிறது. அந்த மகிழ்ச்சி முகத்தின் மூலம் வெளிப்படுகிறது'' என்றார்.

இதுகுறித்து மேலும் தகவலுக்கு 9626244000, 9920185006 என்ற தொலைபேசி எண்ணிற்கோ அல்லது [email protected] என்ற இணையதல முகவரிக்கோ தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...