சிறுகுறு தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ரூ.200 கோடி மதிப்பிலான திட்டங்கள்

சிறுகுறு தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திட்டமிட்ட ரூ.200 கோடி மதிப்பிலான திட்டங்கள் தற்போது ஆய்வில் உள்ளது என்றும், விரைவில் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது என்றும் அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மேலும் தகவலறிந்த  அந்த வட்டாரத்தினர் கூறியதாவது:-

"தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அம்மா வென்சர் கேபிட்டல் ஃபன்ட் திட்டத்தின் மூலம் சிறுகுறு தொழில் துவங்குவோர்களுக்கு ஒரு ஊக்குவிப்பு கிடைத்துள்ளது. இத்திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதன் முதற்கட்டமாக அம்மா வென்சர் கேபிட்டல் ஃபன்டின் மூலம் ரூ.200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது சென்னை பயோடேக் இன்குபேசன்-க்கு வழங்கப்பட்ட ரூ.20 கோடி போலவே கையாளப்படும்.

பெண்களுக்கான கோல்டன் ஜீபிலி பய்யோ டெக் பார்க் தமிழக அரசின் உயிரியல் துறையும், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சிக் கழகமும் இணைந்து துவங்கப்பட்டது. இந்த 5000 சதுர அடி பரப்பளவில் உள்ள இன்குபேசன் மையம் 2021-ம் ஆண்டுக்குள் 500 தொழில் முனைவோர்களுக்கு அடித்தலமாக அமைந்திருக்கும் என கருதப்படுகிறது. இதன் மூலம் ஏற்கனவே 2 பெண் தொழில் முனைவோர்கள் பயனடைந்து வருகின்றனர். இப்புத்தாண்டில் மேலும் பல தொழில்முனைவோர்களை கண்டறிய உள்ளோம்.

தமிழ்நாடு அரசின் நிதி அமைச்சகம் இதற்கான ஆரம்பகட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் புதிதாக துவங்கப்படும் நிறுவனம் 1 கோடி ரூபாய் வரை நிதியுதவி பெற முடியும். இதன் மூலம் பெங்களூரைப் போலவே சென்னையிலும் புதிய தொழில் துவங்குவதற்கான சூழ்நிலைகள் உருவாக வாய்ப்புள்ளது. 

இதற்கான மூலதனம் கடனாகவும், முதலீடாகவும் வழங்கப்பட உள்ளது. இந்த முதலீட்டில் 25 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். மேலும், தொழில் துவங்குவதற்கான முதலீட்டில் 75 சதவிகிதம் கடனாக வழங்கப்படும். இதில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும்.

இந்த திட்டத்திற்கான நிதி மத்திய அரசிடம் இருந்து பெறப்பட உள்ளது. ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டேன்டப் இந்தியா என்ற திட்டத்தின் மூலம் அந்தந்த மாநிலங்களில் உள்ள மக்கள் புதிய தொழில் தொடங்குவதற்கான கலாச்சாரத்தை ஊக்குவிக்கும். இந்த திட்டம் மத்திய அரசு அறிவித்த 10 ஆயிரம் கோடிக்கான சிறந்த திட்டமாகும்.

தற்போது இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான செயல்பாட்டில் உள்ளது. நாங்கள் தற்போது மத்திய அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்'' என அந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...