வால்பாறை தேயிலை தோட்டப் பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வங்கியாளர்களுடன் ஆட்சியர் ஆலோசனை


வால்பாறை தேயிலை தோட்டப் பணியாளர்களுக்கு உடனடியாக மாதாந்திர ஊதியம் வழங்க நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சரின் ஆலோசனைப்படி வங்கியாளர்களிடம் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆலோசனை மேற்கொண்டார்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செவ்வாயன்று (இன்று) நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின்  ஆலோசனைப்படி வால்பாறை தேயிலை தோட்டப் பணியாளர்களுக்கு நிலுவையிலுள்ள மாதாந்திர ஊதியத் தொகையினை உடனடியாக வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், கடந்த ஒருமாத காலமாக புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டு வங்கியின் மூலம் வழங்கப்பட்டு வருவதுடன் பழைய ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகளை திரும்ப பெறும் பணி நடைபெற்று வருவதாலும் ரிசர்வ் வங்கியின் ஆலோசனைப்படி பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளவதாலும் சில காலதாமதங்கள் ஏற்பட்டுள்ளது. 

இதனை கருத்தில் கொண்டு வால்பாறை தேயிலைத்தோட்டப் பணியாளர்களுக்கு மாதாந்திர ஊதியம் வழங்குவதில் வங்கிகளுக்கு திடீர் சிரமம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தேயிலைத்தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க சில ஆலோசனைகள் வங்கியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி வால்பாறை பகுதியில் செயல்பட்டு வரும் பாரத வங்கி, இந்திய வங்கி, யூனியன் வங்கி ஆகிய வங்கிகள் மூலம் நாளை முதல் தேயிலைத்தோட்ட நிறுவனங்களுக்கு சென்று பணியாளர்களிடம் ஒப்புதல் படிவம் பெற்று தேயிலைத்தோட்ட நிறுவன பிரதிநிதிகள் முன்னிலையில் பணப்பட்டுவாடா செய்யப்படும்.

அதேப்போல் ஒவ்வொரு தேயிலைத்தோட்ட நிறுவனத்துக்கும் நேரில் சென்று பணியாளர்களுக்கு பணம் வழங்கும் விவரம் முன்கூட்டியே தெரிவிக்கப்படும். மேலும், மூன்று வங்கியின் மூலமாக நாளை முதல் பணப்பரிவர்த்தனை துவங்கி பத்து தினங்களுக்குள் அப்பகுதியிலுள்ள அனைத்து தேயிலைத்தோட்ட பணியளர்களுக்கும் நிலுவையிலுள்ள கடந்த மாத ஊதியத்தொகை வழங்கப்படும்.

வங்கி கணக்கு தொடங்காத பணியாளர்கள் உடனடியாக வங்கி கணக்கு துவங்கிக்கொள்ள வேண்டும். எனவே அனைத்து தேயிலைத்தோட்ட பணியாளர்களும் வங்கியாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து தங்களுக்குரிய பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார். 

இக்கூட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு, மாவட்ட வருவாய் அலுவலர் த.கிருஸ்துராஜ், தொழிலாளர் நலவாரிய இணை ஆணையர் மாரிமுத்து, வால்பாறை நகர கூட்டுறவு வங்கித் தலைவர் அமீது, முன்னோடி வங்கி மேலாளர் கனகராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிதம்பரம் மற்றும் வங்கி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...