ஆதரவற்றோர் பசியை தீர்க்கும் கோவை உணவு வங்கியின் வெற்றிகரமான 100-வது நாளில் 10 ஆயிரம் பேருக்கு உணவு பரிமாற்றம்


கோவை மாவட்டத்தில் பல ஆதரவற்றோர் இல்லங்களிலும், சாலையோரங்களிலும் ஏராளமான மக்கள் அன்றாடம் உணவின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவிடும் வகையில் கோவை உணவு வங்கி (Food Bank Coimbatore) என்னும் தன்னார்வ அமைப்பினர் உணவு தயாரித்து பரிமாறிவருகின்றனர்.



இவ்வமைப்பு துவங்கப்பட்டு தற்போது 100-வது நாளாக ஆதரவற்றோர்களுக்கு உணவு பரிமாறுவதை முன்னிட்டு கோவை உணவு வங்கியின் சார்பில் இன்று கோவை வஊசி மைதானத்தில் உணவு தயாரிக்கும் பணி நடைபெற்றது.

இதுகுறித்து கோவை உணவு வங்கியின் நிறுவனர் வைஸ்னவி நமது நிருபரிடம் கூறியதாவது:-



இவ்வமைப்பு துவங்கப்பட்டு வெற்றிகரமாக இன்றுடன் 100-வது நாளை அடைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நேற்று (சனி) மதியம் 3 மணியவில் இருந்து காய்கறிகளை வெட்டது துவங்கினோம். இன்று காலை 4 மணியவில் உணவு தயாரிக்கும் பணி நடைபெற்றது. நாங்கள் காய் பிரியாணி, தயிர்-வெங்காயம் மற்றும் இனிப்பு தயாரித்துள்ளோம். எங்களுடன் இணைந்து பலரும் இதில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.



இன்று சுமார் 10 ஆயிரம் பேருக்கான உணவு தயாரிக்கப்பட்டுள்ளது. இது கோவையில் 65 பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கும், சாலையோர மக்களுக்கும் பரிமாறப்பட உள்ளது. எஸ்என்எஸ் ராஜலட்சுமி கல்லூரியில் இருந்து சபிதா மற்றும் அருண் ஆகிய ஆசிரியர்களும் மாணவர்களும் தற்போது எங்களுடன் இணைந்து இந்தச் சேவையில் ஈடுபட்டுள்ளனர்'' என்றார்.



இதுகுறித்து எஸ்என்எஸ் ராஜலட்சுமி கல்லூரி ஆசிரியயை சபிதா நம்மிடம் கூறுகையில், 

கோவை உணவு வங்கியின் இந்த சேவை பாராட்டுக்குறியது. தற்போது நாங்களும் இதில் இணைந்து பணியாற்றியுள்ளோம். எங்களுடன் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களும் இதில் இணைந்துள்ளனர். மாணவர்கள் சமைக்க உதவியும், அதனை பரிமாறுவதற்கும் முன்வந்துள்ளனர். 



ஆதரவற்றோர்களுக்கு என பல தன்னார்வ அமைப்பினர் செயல்பட்டு வந்தாலும் கோவை உணவு வங்கி அமைப்பினர் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி இப்பணியில் ஈடுபட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களது கல்லூரியில் உள்ள மற்ற ஆசியிர்களிடம் இதுகுறித்து கூறி இவ்வமைப்பில் இணைந்து பணியாற்ற செய்வோம்'' என்றார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...