கோவை ஆல் இந்தியா ரேடியொ-வின் 50-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு!

கோவை ஆல் இந்தியா ரேடியோ கடந்த 1966ம் ஆண்டு துவங்கப்பட்டது.  இன்றோடு 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கோவை அகில இந்திய வானொலியின் ஆண்டுவிழா கொண்டாட்டம் கோவை மணி மேல்நிலைப் பள்ளி அரங்கில் இன்று மாலை நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் கோவை ஆல் இந்தியா ரேடியோ-வின் 50-வது ஆண்டுவிழா நினைவாக சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டார்.



தொடர்ந்து அவர் பேசுகையில், 'கடந்த 1966-ம் ஆண்டு தொடங்கிய இந்த வானொலி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 1971ம் ஆண்டு தான் இந்த வானொலி முதன்முதலில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.  கோவை நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஆல் இந்தியா ரேடியோவிற்கு 80 லட்சம் நேயர்கள் உள்ளனர். இதில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு செய்திகள் வெளியிடப்படுகின்றன.



தமிழகத்தில் நான்காவதாக  கோவையில் தான் ஆல் இந்தியா ரேடியோ துவங்கப்பட்டது. தொடங்கிய நாள் முதல் வேளாண்மை, கல்வி ஆகிய செய்திகளும் இயற்கை இடர்பாடுகள் குறித்து முன்னதாகவே மக்களுக்கு தெரிவிக்கும் சேவையையும் செய்து வருகிறது. தொடர்ந்து, இந்த வானொலி சிறப்பாக செயல்பட்டு நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்'. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பேசினார்.



இவ்விழாவிற்கு கோவை அகில இந்திய வானொலியின் நிலையத் தலைமை அதிகாரி கோபாலகிருஷ்ணன் தலைமையேற்றார்.மேலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி, கே.ஜி.மருத்துவமனை தலைவர் பக்தவச்சலம், கவிஞர்கள் புவியரசு மற்றும் கவிதாசன், முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி. கோவிந்ததாஜலு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.


Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...