பி.எஸ்.என்.எல் டவர்களை பிரித்து துணை நிறுவனம் அமைக்கும் மத்திய அரசைக் கண்டித்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் டவர்களை பிரித்து துணை நிறுவனம் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மத்திய அரசைக் கண்டித்து கோவையில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பி.எஸ்.என்.எல்நிறுவனத்தின் மொபைல் டவர்களைப் பராமரிக்க ஒரு துணை நிறுவனம் அமைக்கப்பட வேண்டும் என்று தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் மத்திய அமைச்சரவைக்கு ஒருகுறிப்பு அனுப்பியுள்ளது. மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்தால், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் 65000 மொபைல் டவர்களும் புதிய துணை டவர் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

இந்த முயற்சியை பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்ப்பதால் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை தனியார் மயமாக்கும் தனது நோக்கத்தை நிறைவேற்ற மத்திய அரசு புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது.

தொலைத்தொடர்பு துறையில், டவர் மூலமான வர்த்தகம், மிக லாபகரமான வர்த்தகமாகும். ஆனால், பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது டவர்கள் மூலம் முழுமையாக பலன் பெறவும், அதிகபட்ச லாபமீட்டவும் முடியவில்லை. ஒரு துணை டவர் நிறுவனம் அமைக்கப்பட்டால், நிர்வாகம் டவர் வர்த்தகத்தில் கவனம் செலுத்தவும், டவர்களை மிகத்திறமையாக நிர்வகிக்கவும், அதிகபட்ச லாபம் ஈட்டவும் முடியும்.

தனது அதிகமான தேய்மான செலவினால், பிஎஸ்என்எல் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 2015- 16 ஆம் ஆண்டில், தேய்மான தொகை ரூ.8816 கோடியாகும். துணை டவர் நிறுவனம் அமைக்கப்பட்டால், இந்தத் தேய்மானத்தின் பெரும் பகுதி துணை நிறுவனத்தின் கணக்குக்குள் சென்றுவிடும் என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது. 

மத்திய அரசின் ஆலோசனையின்படி, தான் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைக் கொண்டு துணை டவர் நிறுவனம் இயங்கவுள்ளது. துணை டவர் நிறுவனத்தில், அதிக லாபமீட்டக் கூடிய வர்த்தகத்தை அவர்கள் செய்ய முடியும் என்றால், அதை துணை டவர் நிறுவனம் இல்லாமலேயே அவர்களால் செய்யமுடியும். மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவன விரோத – தனியார் ஆதரவு கொள்கைகளால்தான் பி.எஸ்.என்.எல் நிறுவனம் நஷ்டமடைந்துள்ளது. 

தேய்மானம்தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நஷ்டத்துக்குக் காரணம் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது. 2016- செப்டம்பருக்கு முன்பான ஆறு மாதங்களில், ஐந்து மாதங்கள் நாட்டின் அதிகபட்ச மொபைல் இணைப்புகளை பிஎஸ்என்எல் நிறுவனம் தான் வழங்கியுள்ளது. ஏற்கனவே, 3854 கோடி ரூபாய், செயலாக்க லாபத்தை நிறுவனம் ஈட்டிவிட்ட நிலையில் மத்திய அரசு கண்மூடித்தனமாக செயல்படுவதை எதிர்த்து இன்று (வியாழன்) நாடு முழுவதும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...