விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என தி இந்து வாசகர் திருவிழாவில் சசிகுமார் பேச்சு

தி இந்து தமிழ் நாளிதழின் நான்காம் ஆண்டு துவக்கத்தினை முன்னிட்டு இன்று (டிச. 4) கோவையில் வாசகர் திருவிழா நடைபெற்றது. 



கோவை, நவஇந்தியா அருகே அமைந்துள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர், இயக்குநர் பாரதி கிருஷ்ணன், திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் எம்.சசிகுமார், சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர்.நாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.



கோவை மட்டுமல்லாது திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் என பல பகுதிகளில் இருந்தும் தி இந்து நாளிதழ் வாசகர்கள் ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து, திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் எம்.சசிகுமார் பேசியதாவது:-



தி இந்து நாளிதழ் மக்கள் மத்தியில் தனி தடம் பதித்து உள்ளது. வாசகரின் மனநிலைக்கு ஏற்ப ஒரு செய்தியினை கொண்டு சென்று சேர்ப்பதில் சிறப்பை பெற்றது தி இந்து. 

நாம் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். நாட்டின் பொருளாதார கட்டமைப்பில் விவசாயிகள் பெரிய சிரமங்களை சந்தித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு தேவையானதை நாம் தான் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். வாசகர்கள் விவசாயிகளின் வாழ்க்கை முன்னேற உதவ வேண்டும்'' என்றார்.



இதைத்தொடர்ந்து, வாசகர்கள் மற்றும் சசிகுமாருக்கு இடையே சிறிது நேரம் கேள்வி- பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சசிகுமார் பதிலளித்தார். அப்போது, திரைக்கதையில் காண்பிக்கப்படும் வன்முறை சம்பவங்கள் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அதை தடுக்கவும் குறைக்கவும் மேற்கொள்ள வேண்டியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...