மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்க வேண்டும் - கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள் .


உலகம் முழுவதும் இன்று மாற்றுத் திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு அளிக்க  தமிழக அரசு ஓவ்வொரு ஆரம்ப சுகாதார நிலத்திலும் குறைந்த பட்சம் ஒரு பிசியோதெரபி மருத்துவரை நியமிக்க வேண்டும். 

கடந்த 2011 ஆண்டு மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 5,436,604 பேரும் இதில் தமிழகத்தில் 287241 பேரும் கை, கால் இழப்பு அல்லது செயலிழப்பினால் உடல் ஊனம் அடைந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். இதில் பிறக்கும் போதே ஏற்படும் உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மிக அதிகம். பிறப்பு ஊனத்தை ஆரம்ப காலத்தில் கண்டறிந்து அவர்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பதன் மூலமாக குணப்படுத்த முடியும். அதேபோல் விபத்தினால் ஏற்படும் மூளை பாதிப்பு, முதுகு தண்டுவட பாதிப்பு, கை மற்றும் கால் இழப்பு போன்றவற்றால் ஏற்படும் உடல் ஊனத்தையும் பிசியோதெரபி மருத்துவதின் மூலம் அவர்களின் மாற்று திறனை மேம்படுத்தி மற்றவர்களை போல் இயல்பு வாழ்க்கையை வாழ செய்ய முடியும். இவ்வாறு மாற்று திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் பிசியோதெரபி மருத்துவர்களை ஓவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிளும் நியமிப்பதன் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க முடியும். 

பிறப்பு ஊனத்தை தடுக்க தமிழக அரசு பொது மக்களிடம் ஊனத்திற்கான காரணம் குறித்தும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க அனைத்து மாவட்டங்களிலும் பிசியோதெரபி மருத்துவர்கள் தலைமையில் மறுவாழ்வு மையம் அமைக்க படவேண்டும்.

மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு திறமைகளை ஊக்கபடுத்த அனைத்து மாவட்டங்களிலும் மாற்றுதிறனாளிகளுக்கான தனி விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும்.அதில் மாற்றுத் திறனாளிகளை அவர்கள் விரும்பும்  விளையாட்டுக்கு ஏற்றால் போல் உடலை தகுதி படுத்த பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்க வேண்டும். 

இதன் மூலம் கடந்த ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற திரு.மாரியப்பன் அவர்களை போன்ற  சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும். இவ்வாறு கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் டாக்டர். ராஜேஸ் கண்ணா கூறியுள்ளார்.

Newsletter

வாளையாறு பாதை மேம்பாடு: கோவை ரயில்கள் தாமதம், ஷொரணூர் ரயில் ரத்து

வாளையாறு பகுதியில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் ஏப்ரல் 11 முதல் 19 வரை கோவை ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்....

தோல்வி பயத்தில் செந்தில் பாலாஜி தரம் தாழ்ந்து பேசுகிறார்..!

கோவை தெற்கு தொகுதியில் அம்மன் அர்ஜூனன் வரலாறு காணாத வெற்றியைப் பெறப் போகிறார்; அந்த பயத்தில் தான் செந்தில் பாலாஜி தரம்...

தோல்வி பயத்தில் செந்தில் பாலாஜி தரம் தாழ்ந்து பேசுகிறார் - அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் வரலாறு காணாத வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில், திமுக அமைச்சர் செ...

“தி.மு.க தோற்றால் கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்” – கோவையில் அண்ணாமலை..!

கோவை வடக்கு தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற அண்ணாமலை, தி.மு.க மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார...

சாரட் குதிரை வண்டியில் பிரசாரம்: சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் சாரட் குதிரை வண்டியில் பாப்பநாயக...

திருப்பூர் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் 34, 35 வது வார்டுகளில் நேற்று தீவிர வாக்கு சேகரி...