இந்திய தொழில் வர்த்தக சபை கோவை சார்பில் 'ஒன்றிணைவோம்' கருத்தரங்கு

கோவை: அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில் கோவை இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் 'ஒன்றிணைவோம்' என்ற கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழகத்தில் உள்ள தொழில் வர்த்தக சங்கங்களின் அனைத்து தலைவர்களையும், பொறுப்பாளர்களையும் இணைக்கவும் நம் மாநிலத்திற்கு முன்னேற்றத்தையும் வளத்தையும் கொண்டுவருவதற்குமான ஒரு முன்முயற்சியே இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கம்.



இந்நிகழ்ச்சியில், சுமார் 18 தொழில் வர்த்தக சங்கங்கள் கலந்து கொண்டது. வணிக அமைப்புகள் நம் மாநிலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல என்னென்ன செய்யவேண்டும் என்பது தொடர்பான கருத்துக்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டது. மேலும் தமிழக பொருளாதாரத்தில் சில முக்கிய பிரச்சனைகளாக பல வகைகளில் பாதிப்பவை.




1. வரும் 1 ஏப்ரல் 2017ம் தேதி முதல் அமலாக்கவிருக்கும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை.
2. ரொக்க பணமில்லாத பொருளாதாரத்தை உருவாக்கும் பொருட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை.
3. தொழிலாளர் நிர்வாகம் போன்றவை, எப்படி தீர்ப்பது என முடிவு செய்வதே இதன் முக்கிய நோக்கம். 

'ஒன்றிணைவோம்' என்பது தமிழக முன்னேற்றத்திற்கு அவசியமான தளங்களில் தொழில் வர்த்தக அமைப்புகள் அரசாங்கத்துடன் இணைந்து  செயல்படுவதற்கான ஓர் அமைப்பு. இதில், உங்களது முயற்சியில் பங்கெடுத்து மதிப்பு மிகுந்த கருத்துக்களை முன்வைத்து பொது விவாதங்களை உருவாக்கி உரிய விளைவுகள் ஏற்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்பதற்கே கோவை, இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் இக்கருத்தரங்கு நடைபெற்றது. 

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...