பிளாஸ்டிக் இல்லா நகரமாக மாற்ற கோவை மாநகராட்சி நடவடிக்கை!


கோயமுத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற கூட்டரங்கில் கடை உரிமையாளர்கள் பாலித்தீன் பைகளை தவிர்த்து துணிகளால் ஆனா பைகள் உபயோகிப்பதாக  உறுதியளித்தனர். உறுதியளித்த முதல் 100 கடைகளின் பெயர்களை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டு, கடை உரிமையாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.



பின்னர், பேசிய அவர்:-

கோவையில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் மற்றும் பாலத்தீன் பைகள் பெருகி வருவதால், சுற்றுசூழல் பாதிக்கப்பட்டு வருகிறது.  இதை தடுத்திடும் வகையில் சுகாதார அலுவலர்கள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இணைந்து கோவையிலுள்ள கடை உரிமையாளர்கள் தானாகவே முன்வந்து பாலித்தீன் பைகளை தவிர்த்து துணிகளால் ஆன பைகள் உபையோகிப்பதாக உறுதியளித்தனர். இதுபோன்ற கடைகளுக்கு உரிய அங்கீகாரமும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.

மேலும், பாலத்தீன் பைகள் உயிர்களுக்கும், பூமிக்கும் பெரும் கேடுகளை உருவாக்குகிறது. குறிப்பாக பாலித்தீன் பைகள் மக்குவதில்லை. இதனால் மழைநீர்  மண்ணுக்கு செல்லாமல், நிலத்தடி நீரும் பாதிக்கிறது. இதுபோன்ற கேடுகளை தவிர்க்க பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும் போது துணிகளால் ஆனா, பைகளை எடுத்து செல்லவும், இதன்மூலம் கோவை நகரம் பிளாஸ்டிக் இல்லா நகரமாக மாற்ற முடியும் என கூறினார்.

இதில், கோவை மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் எம்.சந்தோஷ்குமார் மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...