குஜராத்தில் ரூ.2.5 லட்சம் லஞ்ச தொகை ரூ.2 ஆயிரம் தாள்களாக பிடிபட்டதால் பரபரப்பு, இருவர் கைது

பழைய ரூ.500,1000 தாள்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பையடுத்து நாடு முழுவதும் ரூபாய் தாள்களை மாற்ற மக்கள் கடும் சிரமப்பட்டு வரும் நிலையில், குஜராத்தில் உள்ள இரண்டு துறைமுக அதிகாரிகள் ரூ.2.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டனர். ஆனால், இதில் விநோதம் என்னவெனில் லஞ்சப்பணம் அனைத்தும் புதிய ரூ 2 ஆயிரம் தாள்கள் என்பது கவனிக்கத்தக்கது.

நவம்பர் 11 ஆம் தேதி முதல் புதிய ரூ.2 ஆயிரம் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தாள்கள் இன்னும் புழக்கத்தில் போதிய அளவில் வாராததால் மக்கள் கடும் சிரமப்பட்டு வரும் நிலையில், லஞ்சப்பணமாக இவ்வளவு தொகையில் புதிய ரூ 2 ஆயிரம் தாள்கள் கிடைத்தது சோதனையிடச்சென்ற அதிகாரிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

குஜராத்தில் உள்ள கண்டாலா துறைமுகத்தில் அதிகாரிகளாக பணியாற்றி வரும் பி ஸ்ரீவிவாசு மற்றும் கே கோமேட்கர் ஆகியோர் லஞ்சம் பெற்றதாக கைதுக்குள்ளான அதிகாரிகள் ஆவர்.  இவர்கள் 4.4 லட்சம் தொகைக்கான நிலுவை பில் தொகையை மாற்றுவதற்காக தனியார் மின்னனு நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றுள்ளனர். இதையடுத்து குஜராத் ஊழல் தடுப்பு பிரிவால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீனிவாசுவின் வீட்டில் இருந்து மேலும் ரூ. 40 ஆயிரம் தொகையை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். புதிய ரூபாய் தாள்கள் லஞ்சப்பணமாக கிடைத்தது எப்படி என்பது பற்றி ஊழல் தடுப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...