50 மைக்ரானுக்கும் குறைவாக பிளாஸ்டிக் பொருள் விற்போர்க்கு அபராதம்- மாநகராட்சி ஆணையர் தகவல்

கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 50 மைக்ரான் அளவுக்கும் குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைக் கண்டறிந்து அபராதம் விதிப்பதுடன் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

''கோவை மாநகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் அவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருமுறையே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட தட்டுகள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் உணவு தட்டுகள் உள்ளிட்ட ஏனைய பிளாஸ்டிக் பொருட்கள் மக்களால் முறையின்றி கண்ட இடங்களில் வீசப்படுகின்றன. அவை மக்கும் தன்மை இல்லாததால் சுற்றுப்புறச் சூழலுக்கு அதிகளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றது.

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக செவ்வாயன்று உதவி மாநகர நல அலுவலர், சுகாதார ஆய்வாளர்களுடன் சுந்தராபுரம் பகுதியிலுள்ள மொத்தமாக பிளாஸ்டிக் விற்பனை செய்யும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது 50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பாலித்தீன் பை என 450 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேப்போன்று மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதி பிளாஸ்டிக் பொருள் விற்பனை செய்யும் கடைகளிலும் திடீர் சோதனை நடத்தப்படும். மேலும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்'' என தெரிவித்துள்ளார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...