பள்ளி மாணவருக்கு பிரம்படி கொடுத்த ஆசிரியர் - அரசு மருத்துவமனையில் மாணவனுக்கு சிகிச்சை


கோவை ஆர்.எஸ்.புரத்தை அடுத்த காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு தரணிதரன் (13) என்ற மகன் உள்ளார். இவர், பூமார்க்கெட் பகுதியில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் 7 ம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில், திங்களன்று தரணிதரன் பள்ளியில் விளையாடிய போது அவரது கணித ஆசிரியர் சிவராஜ் பிரம்பால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு வந்த தரணிதரன் இது குறித்து பெற்றோரிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல், அழுதபடி உறங்கினார். இதைத்தொடர்ந்து, செவ்வாயன்று (இன்று) காலையும் அதேபோல் சிவராஜ் தரணிதரனை பிரம்பால் அடிக்கவே அவர் தனது பெற்றோரிடம் புகார் அளித்தார். 



இதைத்தொடர்ந்து பள்ளிக்கு வந்த பெற்றோர் தரணிதரனை அழைத்துக்கொண்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்தனர். இதுகுறித்து மாணவரின் தந்தை கூறுகையில், என் மகனை கணித ஆசிரியர் சிவராஜ் தாக்கியதாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பள்ளி நிர்வாகத்தின் மீதும், எனது மகனை தாக்கி ஆசிரியர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

பள்ளி நிர்வாகத்தின் மீது புகார் கொடுக்க விருப்பம் இல்லை என்று கூறிய பெற்றோர், அம்மாணவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.



Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...