கோவையில் 8 வயது சிறுமியின் சிகிச்சைக்காக உதவி கேட்டவரிடம் நூதன மோசடி

கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் இவரது இளைய மகள் ராஜகுமாரி எட்டு வயது, ராஜகுமாரிக்கு பிறவியிலேயே காது மற்றும் வாய் பேசும் திறன் இல்லாமல் பாதிக்கப்பட்டவர். இவரின் அறுவை சிகிச்சைக்காக கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகளை நாடி வந்தார். ஆனால் எந்த பயனும் இல்லாததால், முதல்வரின் தனிப் பிரிவிற்கு நாகராஜ் மனு அளித்துள்ளார். 

இதையடுத்து, நாகராஜை மாவட்ட ஆட்சியரை சந்திக்கக்குமாறு முதல்வர் தனிப்பிரிவில் இருந்து பதில் கடிதம் அனுப்பட்டது. ஆனால் மாவட்ட ஆட்சியரை நேரில் பார்க்கவிடாமல் அதிகாரிகள் தடுத்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து செய்தித்தாள் விளம்பரங்கள் மூலம் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டுகோள் விடுத்தார். இதை பார்த்து பல்வேறு தன்னார்வலர்கள் பல்வேறு உதவிகள் செய்து வந்த நிலையில், நடிகர் மற்றும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையில் இருந்து அழைப்பதாக கூறி பிரவீன் என்பவர் நாகராஜை தொடர்பு கொண்டு அறக்கட்டளை மூலம் மூன்று லட்சம் வரை உதவி செய்வதாக கூறி உள்ளார். 

மேலும் இயக்குநர் பாலா, கோவை சித்தாபுதூர் ஐய்யப்பன் கோவில் அறக்கட்டளை என ஏராளமானோர் உதவி செய்ய தயாராக உள்ளதால் ரேசன் கார்டு மற்றும் ஆதார் அட்டை நகல்களை மின்னஞ்சல் மூலம் அனுப்புமாறு பிரவீன் கூறி உள்ளார். அடுத்த இரண்டு நாள் கழித்து ஆன் லைன் வங்கி கணக்கு மூலம் பணம் அனுப்புவதாகவும், இதற்காக மகளின் பெயரின் வங்கி கணக்கு துவங்க எட்டாயிரம் பணத்தை வங்கி மேலாளர் வங்கி கணக்கு அனுப்ப வேண்டும் என கூறி உள்ளார். இதை நம்பி நாகராஜ் வங்கி ஊழியர் என பேசிய சங்கர் என்பவரின் வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்தி உள்ளார். இதை அடுத்து தொலைப்பேசியில் தொடர்பு கொண்டபோது அனைவரின் தொலைபேசியும் அனைத்து வைக்கப்பட்டதும், அவர்கள் மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. 

இதை அடுத்து, பாதிக்கப்பட்ட நாகராஜ் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போதுமான ஆவணங்கள் இல்லாததால் புகார் எடுக்க முடியாது என கூறியதாக தெரிகிறது இதை அடுத்து கோவை மாநகர காவல் ஆணையரின் புகார் மனு ஒன்றையும் நாகராஜ் கொடுத்துள்ளார். இதில் தன் மகள் பெயரை கூறி அவர்கள் மேலும் மோசடியில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். குழந்தையின் உதவிக்காக பல்வேறு நல்ல உள்ளங்கள் உதவி செய்ய முன்வந்து கொண்டிருந்த நிலையில், இம்மாதிரியான மோசடி நபர்களின் செயல்கள் வேதனையளிப்பதாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...