தமிழகத்தில் பறவைக் காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை- கால்நடை பராமரிப்புத் துறை தகவல்


தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், கேரளாவில் பறவைக் காய்ச்சல் ஒழிக்கப்பட்டது என அறிவிக்கும் வரை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் கமலேஷ் தனப்பன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் வாளையாறு, வேலாந்தாவளம், ஆனைகட்டி உள்ளிட்ட 12 பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி மருந்து தெளித்த பின்னரே, தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.

மேலும், பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுக்க கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கோவை வாளையாறு பகுதியில் உள்ள பறவைக் காய்ச்சல் தடுப்பு சோதனைச் சாவடியில் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் கமலேஷ் தனப்பன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

''பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுக்க கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள 6 மாவட்டங்களில் 26 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது என அறிவிக்கும் வரை இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும். கேரளாவில் இருந்து வரும் வாத்து, கோழி, முட்டை உள்ளிட்ட பொருட்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது. மேலும், பறவைக் காய்ச்சல் கிருமியினால் மனிதனுக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கோழிப்பண்ணை, பறவைகள் சரணாலயம், உயிரியல் பூங்காக்களில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், அங்கு அதிகப்படியான பறவைகள் இறப்புகள் இருந்தால் கால்நடை பராமரிப்புத் துறையினருக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். இறந்த பறவைகளை பரிசோதனைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்தார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...