பருவமழைக் காலத்தில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவது எப்படி?

இன்று முதல் (நவம்பர் 1) டிசம்பர் 31 வரை வடகிழக்கு பருவமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இக்காலத்தில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவது எப்படி என கோவை போக்குவரத்து காவல் துணை ஆணைய‌ர்  சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.


அவர் கூறுகையில்:- 
மழைக்காலங்களில் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்கு,  பிரேக்,  கிளட்ச்,  டயர் மற்றும் வைப்பர் போன்றவை நன்கு இயங்கும் நிலையில் உள்ளதா என்று பரிசோதிப்பது அவசியம். மழையின் போது வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் மழை பெய்யும் போது நம்மால் சாலையை தெளிவாக பார்க்க முடியாது. தண்ணீர் தேங்கி நிற்கும் சாலைகளில் மிக மெதுவாக வாகனத்தை செலுத்த வேண்டும். மழையால் ஏற்பட்ட சேதம், மழைநீரால் அடித்து வரப்பட்ட பொருட்கள் மற்றும் மூழ்கியுள்ள வேகத்தடைகளால் விபத்து நேரிடலாம். சாலையின் மையப்பகுதியில் பயணிப்பது பாதுகாப்பானது. 


தரைப்பாலங்களின் மேல் வெள்ளம் செல்லும் போது அதனை கடக்க முயற்சிக்க வேண்டாம். மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் காவல்துறை மேற்கொள்ளும் தடை மற்றும் போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைக்க வேண்டும். சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பது, மரம் விழுந்து கிடப்பது,  மின்சார கம்பிகள் அறுந்து கிடப்பது மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்றவற்றை காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 100ல் தகவல் தெரிவிக்கலாம். மேலும், கோவை மாநகர பொதுமக்கள் 8190000100 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்தார். வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்தார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...