நலமுடன் சுற்றித்திரியும் காட்டு யானைகள்


கோவை மாவட்டம், பெரிய தடாகம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் காட்டு யானை ஒன்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் வனத்துறை மருத்துவர்கள் அதற்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து சாடிவயல் யானைகள் முகாமிற்கு அழைத்துச் சென்று அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஒரு ஆண் குட்டியை அது ஈன்றது. 

தொடர்ந்து தாய் மற்றும் குட்டி யானைக்கு சிகிச்சை அளித்து வந்த வனத்துறை மருத்துவர்கள் அதனை வனப்பகுதிக்குள் விட்டனர். 

இதனைத்தொடர்ந்து அந்த இரு யானைகளையும் தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். தற்போது அந்த யானைகள் போரதி, முள்ளான்காடு வனப்பகுதியில் சுற்றிவருகிறது. பெண் காட்டு யானை தற்போது, வனத்தின் சூழலுக்கு ஏற்றாற்போல் தன் குட்டியை பராமறித்து வருகிறது. ஓரிரு நாட்களில் மற்ற யானைக் கூட்டத்துடன் இணைந்துவிடும். இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு அந்த தாய் மற்றும் குட்டி யானை வனத்துறையினரின் கண்காணிப்பிலேயே இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...