ஊத்துக்குளி அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து.



ஊத்துக்குளி அருகே உள்ள கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தவறான பாதையில் சென்ற லாரி அடுத்தடுத்த 5 வாகனங்களின் மீது மோதிய விபத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் காயம். 



வட மாநிலத்தவருக்கு சொந்தமான லாரியை அதன் டிரைவர் குடிபோதையில் ஓட்டி வந்துள்ளதாக தெரிகிறது. செங்கப்பள்ளி அருகே வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாருமாறாக வந்த லாரி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி சென்ற இரண்டு கார் மற்றும் ஒரு இரண்டு சக்கர வாகனம் இவற்றின் மீது மோதி விட்டு நிற்காமல் கோவையில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற அரசுபேருந்தின் மீது மோதியதில் அரசு பேருந்து கவிழ்ந்தும், அதன்பின்னர் அந்த லாரி நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி நின்றதாகவும் தெரிகிறது. 

இதில் காரில் பயணம் செய்த நான்கு பேர் மற்றும் பேருந்தில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனார். விபத்தினை ஏற்படுத்திய லாரி ஓட்டுனருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேற்கு மண்டல காவல் ஆய்வாளர் பாரி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா மற்றும் ஊத்துக்குளி போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் காயம் அடைந்தவர்கள் பற்றிய விபரம் உடனடியாக தெரியவில்லை. 

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...