ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மீது முட்டை வீச்சு.. இளைஞர் கைது

பரிபடா: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மீது மாணவர் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் முட்டை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் மயூர்பான்ஜ் மாவட்டத்திற்கு ஒரு நாள் பயணமாக முதல்வர் நவீன் பட்நாயக் சென்றார். சுலியபடா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நடந்த விழாவில் முதல்வர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு திரண்டிருந்த மாணவர் காங்கிரஸ் தொண்டர்கள், நவீன் பட்நாயக் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக்கு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, மாணவர் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் முதல்வர் நோக்கி திடீரென முட்டையை வீசினார். ஆனால் அது அவர் மீது விழவில்லை. இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதனையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கட்டுப்படுத்தினர்.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதற்குள் முட்டை வீசிய காங்கிரஸ் தொண்டரை அங்கிருந்தவர்கள் பிடித்து சரமாரியாக தாக்கினர். பின்னர்அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் நடைபெற்ற புற்றுநோய் சிகிச்சை மாநாடு: நவீன நோய் எதிர்ப்புச் சிகிச்சை முறைகள் குறித்த விரிவான விவாதம்

கோவை KMCH மருத்துவமனையில் TAMPOS நடத்திய மூன்றாவது மாநாடு லீ மெரிடியன் ஹோட்டலில் மார்ச் 20 முதல் 22 வரை நடைபெற்றது. புற்...

கோவை P.N.புதூரில் பகத்சிங் மற்றும் வே.கௌதம்குமார் நினைவு தினம் அனுசரிப்பு

கோவை மேற்கு மண்டல P.N.புதூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக விடுதலை போராட்ட வீரர் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆ...

கோவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்

கோவை அவிநாசி சாலையில் உள்ள எம்.என்.சி.ஆர். கிராண்ட் பேலஸில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆல...

கோவை மழலைகள் 20 நிமிடங்களில் 1376 கணக்குகள் - செந்தில் பாலாஜி பாராட்டு

கோவை வெள்ளலூரில் உள்ள Agaram Kids Montessori பள்ளியில் யு.கே.ஜி பயிலும் மழலைகள் 20 நிமிடங்களில் 1376 கணக்குகளை செய்து சா...

திராவிட மாடல் ஆட்சியில் ஈர்க்கப்பட்டு அதிமுக மாற்று அணியினர் 300 பேர் திமுகவில் இணைப்பு

கோவை கொடிசியாவில் அதிமுக மாற்று அணி மாவட்ட செயலாளர்கள் மோகன்ராஜ், குணாளன், முருகேசன் உட்பட 300க்கும் மேற்பட்டோர் முதல்வர...

கோவை உக்கடம் மீன் சந்தையில் வரத்து குறைவால் விலை உயர்வு

கோவை உக்கடம் லாரிப்பேட்டை மொத்த மீன் மார்க்கெட்டில் கேரளா, கர்நாடகாவில் இருந்து வரும் மீன்கள் வரத்து குறைந்ததால் விலை அத...