ஸ்ட்ரீட் ஆர்ட் மூலம் கோவை மாநகரை அழகாக்கும் பணிகள் ஆரம்பம்

கோவை : கோவை மாநகராட்சி சார்பில் நகரின் முக்கிய கட்டிடங்களில் சர்வதேச புகழ்பெற்ற 'ஸ்ட்ரீட் ஆர்ட்' அமைப்பைச் சேர்ந்த கலைஞர்களைக் கொண்டு வண்ணமயமான பிரமாண்ட ஓவியங்கள் வரையும் பணிகள் தொடங்கியுள்ளன.

கோவை : கோவை மாநகராட்சி சார்பில் நகரின் முக்கிய கட்டிடங்களில் சர்வதேச புகழ்பெற்ற 'ஸ்ட்ரீட் ஆர்ட்' அமைப்பைச் சேர்ந்த கலைஞர்களைக் கொண்டு வண்ணமயமான பிரமாண்ட ஓவியங்கள் வரையும் பணிகள் தொடங்கியுள்ளன.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரின் உயரமான அரசு கட்டிடங்களில் எழில்மிகு வண்ணச் சுவர் ஓவியங்களை வரைந்திட கோவை மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக, இத்தாலியைச் சேர்ந்த பிரபல ஓவியக்கலைஞர் தலைமையிலான குழுவினரோடு கோவை மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. ஓவியம் வரைவதற்கான சுவர், ஓவியர்களின் பயணம் மற்றும் தங்கும் செலவுகளை மாநகராட்சி ஏற்றுக் கொண்டுள்ளது. பன்னாட்டு ஓவியர்களைக் கொண்ட இக்குழு பல நாடுகளில் இலவசமாக சுவர் ஓவியங்களை வரைந்து கலைச் சேவையை ஆற்றி வருகிறது. 



இக்குழுவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஓவியர்களும், மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், கோவை மாநகராட்சியை அழகு படுத்தும் விதமாக சுவர் ஓவியம் வரையும் பணிகளை ஓவியக் கலைஞர்கள் தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக, மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் அலுவலக கட்டிடங்களில் வர்ணம் பூசப்பட்டு, சுவர் ஓவியம் வரையும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

"நகரின் பெரும்பாலான சுவர்கள் போஸ்டர்களாலும், அரசியல் கட்சிகளின் பெயர்களாலும் நிறைந்து மிக மோசமாகக் காட்சியளித்து வரும் நிலையில், சுவர் ஓவியங்கள் நகரின் அழகை மேலும் அதிகரிக்கும். கோவையைச் சேர்ந்த இளம் ஓவியர்கள் பன்னாட்டு ஓவியர்களின் கலை நுணுக்கங்களை அறிந்து கொள்ள இது ஓர் அரிய வாய்ப்பாக அமையும்," இவ்வாறு ஓவியக் கலைஞர்கள் கூறுகின்றனர்.

அடுத்தடுத்து, டவுன்ஹால் பகுதியில் உள்ள நூலகக் கட்டிடம், ரெட் க்ராஸ் கட்டிடம் மற்றும் மருத்துவக் கல்லூரி கட்டிடம் ஆகியவற்றில் ஓவியம் வரையப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...