நிலங்களைக் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தலைப்பாகை கட்டி விவசாயிகள் கவன ஈர்ப்பு மனு

கோவை : விரிவாக்கம் என்ற பெயரில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்த கூடாது என வலியுறுத்தி தலைப்பாகை கட்டி கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு மனு அளித்தனர்.

கோவை : விரிவாக்கம் என்ற பெயரில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்த கூடாது என வலியுறுத்தி தலைப்பாகை கட்டி கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு மனு அளித்தனர்.

கரூரில் இருந்து கோவை வரை ரூ. 2,400 கோடி மதிப்பில் ஆறுவழி பசுமை சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதனால், சுமார் மூவாயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்பதால், இதற்கு மாற்றாக ஏற்கனவே உள்ள சாலையை விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். 

இவர்களது கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தலைப்பாகை கட்டி கவன ஈர்ப்பு மனு அளித்தனர். அதில், கரூரில் இருந்து கோவை வரை ஆறுவழி பசுமை சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. 

இதனை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் 53 கி.மீ. பயண தூரம் குறையும். மேலும், கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தின் வடக்கு பகுதியில் கருமத்தாம்பட்டியில்-கிட்டாம்பாளையம் வழியாக சத்தி சாலை வரையும், சத்தி சாலையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலை வரை உள்ள 12 வழித்தடங்களில் கீரணத்தம் வழியாக பெரிய நாயக்கன் பாளையம் செல்லும் வழித்தடத்தை விரிவாக்கம் செய்தால் விவசாய நிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பினை தவிர்க்கலாம், இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...