மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை

நீலகிரி : உதகை அருகே மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது


நீலகிரி : உதகை அருகே மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உதகை அருகே உள்ள புதுமந்து பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ் (42). இவரது மனைவி முபினா (37). இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் இரு மகன்கள் உள்ளனர். அப்பாஸ் தினந்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி வழக்கம்போல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அப்பாஸ், தனது மனைவி முபினா மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் தீக்காயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 



ஆனால், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக புதுமந்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அப்பாஸை கைது செய்தனர். இந்த வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கொலையாளி அப்பாஸிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி முரளிதரன் இன்று தீர்ப்பளித்தர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...