நண்பனுக்காக மூன்று பேரை கொன்றேன்: மும்பையில் கைதான பிரபல ரவுடி கோவையில் வாக்குமூலம்

கோவை: சூலூர் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு 3 பேரை கொலை செய்த வழக்கில் கைதான மோகன்ராம் காவல்துறையினரின் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவை: சூலூர் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு 3 பேரை கொலை செய்த வழக்கில் கைதான மோகன்ராம் காவல்துறையினரின் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூர் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பழிக்குப்பழியாக மகாதேவன், தியாகு, அருண் ஆகிய மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 21 பேரை சூலூர் போலீசார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான மோகன்ராமை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அவரை மும்பையில் வைத்து கோவை தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். 



பின்னர் கோவை அழைத்து வரப்பட்ட மோகன்ராம் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனது உயிர் நண்பனின் உறவினரை மகாதேவன், தியாகராஜன் ஆகியோர் கொடூரமாக கொலை செய்தனர். இந்த வழக்கில் கைதான அவர்கள் 3 பேரும் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். பின்னர் அவர்கள் 2015-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ஆம் தேதி கோவை சிறையில் இருந்து வெளியே வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

உடனே நாங்கள் அவர்களை கொலை செய்யத் திட்டம் தீட்டினோம். இதற்காக நாங்கள் ஆகஸ்டு மாதம் 24-ஆம் தேதி கோவை வந்து மத்திய சிறையின் அருகே உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கினோம். எப்படியும் அவர்கள் 3 பேரும் தஞ்சாவூருக்கு தான் செல்வார்கள். அதற்கு அவர்கள் கோவை-திருச்சி சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.

எனவே அவர்களை அந்த சாலையில் வழிமறித்து கொலை செய்ய திட்டம் தீட்டினோம். சம்பவம் நடந்த அன்று இரவு 8 மணிக்கு அவர்கள் 3 பேரும் சிறையை விட்டு வெளியே வந்தனர். அப்போது நாங்கள் அங்கு ஒரு காருக்குள் மறைந்திருந்து கண்காணித்துக் கொண்டே இருந்தோம்.

அவர்கள் ஒரு காரில் ஏறி கோவை திருச்சி சாலையில் வேகமாகச் சென்றனர். அந்த காரை பின்தொடர்ந்து நாங்கள் மூன்று கார்களில் சென்றோம். அவர்கள் சூலூரை கடந்து சென்ற பின்னர் தான் கொலை செய்ய முடிவு செய்தோம். ஆனால், அவர்களின் கார் சிந்தாமணி புதூர் அருகே எல்.என்.டி பைபாஸ் சாலையில் உள்ள சிக்னலில் நின்றது.

அப்போது அங்கு நின்ற வாகனங்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவு இதுதான் சரியான நேரம் என்று நினைத்தேன். அவர்கள் சென்ற காருக்கு முன் சென்று எங்கள் காரை குறுக்கே நிறுத்தி பின் கையில் துப்பாக்கி மற்றும் அரிவாளுடன் காரைவிட்டு கீழே இறங்கினேன். என்னைப் பார்த்ததும் காரின் முன் பகுதியில் இருந்த மகாதேவன் காரை வேறு வழியாக திருப்பும் படி ஓட்டுநரிடம் கூறினார்.

எனவே அந்த கார் மீது துப்பாக்கி சூடு நடத்தினேன். ஓட்டுநர் மார்பு பகுதியில் குண்டு பாய்ந்தது. இதனால் அவரால் காரை ஓட்ட முடியவில்லை. இதையடுத்து காருக்குள் இருந்த மற்ற 7 பேரும் கீழே இறங்கி ஓடினார்கள். அதில் மகாதேவன், தியாகராஜன், அருண் ஆகியோர் மட்டுமே எங்களிடம் சிக்கினார்கள். எனவே நாங்கள் அவர்களின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தோம்.

இது நாங்கள் கூலிக்காக செய்த கொலை அல்ல என்பது நண்பனுக்காக அவன் மீது நான் வைத்திருந்த பாசம் காரணமாக செய்த கொலை. இதற்காக நாங்கள் எந்த வித பணமும் வாங்கவில்லை. இந்த சம்பவம் நடந்து முடிந்ததும் போலீசார் என்னை என்கவுண்டரில் கொன்றுவிடுவார்கள் என்று நினைத்து குஜராத் மாநிலத்துக்குச் சென்று அங்கிருந்து ஒரு ஆண்டுக்கு முன்பு மும்பை சென்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தேன். எனினும் எனது இடத்தை எப்படியோ கண்டுபிடித்து போலீசார் கைது செய்து விட்டனர்

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...