ரெட் அலர்ட் குறித்து எச்சரிக்கை அவசியம், பயம் தேவையில்லை : வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம்

கோவை : கோவையைப் பொறுத்தவரையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும், ரெட் அலர்ட் குறித்து எச்சரிக்கை மட்டுமே அவசியம் தவிர பயப்படத் தேவையில்லை என தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


கோவை : கோவையைப் பொறுத்தவரையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும், ரெட் அலர்ட் குறித்து எச்சரிக்கை மட்டுமே அவசியம் தவிர பயப்படத் தேவையில்லை என தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது :- கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவையைப் பொறுத்தவரை அடுத்த 3 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரம் வெப்ப நிலையைப் பொறுத்தவரையில் 31.5 அதிகபட்சமாக பதிவாகக்கூடும் இரவு நேரத்தில் 21 முதல் 22 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது. அதே சமயம், காற்றின் வேகம் 10 கி.மீ. முதல் 12 கி.மீ. வரை வீசக்கூடும். 

ரெட் அலர்ட் என சொல்லக்கூடிய 7-ம் தேதி கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் அதிக அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதாவது 90 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. காரமடையில் 80 மி.மீட்டரும், சர்க்கார் சமாக்குளத்தில் 40 மி.மீட்டரும், பெரியநாயக்கன்பாளையத்தில் 41 மிமீ, மதுக்கரையில் 25 மி.மீட்டரும், ஆனைமலை, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை பகுதிகளில் 25 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, அன்னூர், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் தூரல் மழை பெய்யும்.

அடுத்த மூன்று நாட்களில் கோவையில் 110 மி.மீட்டரும், நீலகிரியில் 110 மி.மீட்டரும், திருப்பூரில் 70 மி.மீட்டரும், ஈரோட்டில் 100 மி.மீட்டர் மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, ரெட் அலர்ட் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம், பயப்படத் தேவையில்லை.

விவசாயிகள் நீர் பாய்ச்ச வேண்டாம். பூச்சி மருத்துகள் அடிக்க வேண்டாம். வடிகால்களை சீர்செய்து வைத்துக் கொள்ள வேண்டும். வாழை மரங்களுக்கு முட்டு கொடுக்க வேண்டும். கரும்புகளுக்கு விட்டம் கட்ட வேண்டும். கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், தூத்துக்குடி, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது, என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...