திருப்பூர் : ஊதியத்தில் முறைகேடு செய்ததாகக் கூறி திருப்பூர் ரயில் நிலைய உதவி மேலாளரின் அலுவலகத்தை கூட்செட் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் .

ரயில்.நிலையத்திற்கு வரும் சரக்குகளை ஏற்றி இறக்க சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த வாரம் திருப்பூர் ரயில் நிலையம் வந்த ஹவுரா செல்லும் சரக்கை ஏற்றி, இறக்கியதற்கான தொகை சுமார் ரூ. 28,000 பணத்தை உதவி மேலாளர் முத்துக்குமார் முறைகேடு செய்ததாகக் கூறி ரயில் நிலைய மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், சரக்குகளை ஏற்றி இறக்கும் நடைபாலத்தை சமதளமாக்க வேண்டும் எனவும், முறையான குடிநீர் வசதியினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி அவர்கள் பணியினை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ரயில் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், மேலாளர் வந்து பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணலாம் என உறுதியளித்ததையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.