கோவை: அடுத்த ஆண்டு முதல் சிங்காநல்லூர் குளத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பது இல்லை என்று இந்து அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து ஒருமனதாக முடிவு செய்துள்ளனர்.

சிங்காநல்லூர் குளத்தை ஊராக பல்லுயிரியல் பாதுகாப்பு மையம் என்று கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. இந்த குளம் நுண்ணுயிரிகள் மற்றும் பறவைகளில் வாழ்விடமாக இருப்பதன் காரணமாக தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது.
அதே நேரத்தில் ஆண்டாண்டு காலமாக விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து இந்த குளத்தில் சிலைகளை கரைக்கும் வழக்கமும் இருந்து வருகிறது. இதனால், குளத்தை சார்ந்து வாழும் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
ஏற்கனவே கழிவு நீர் கலப்பு, ஆக்கிரமிப்பு என்று தவிக்கும் குளத்தில் சிலைகளையும் கரைக்க வேண்டாமே என்ற கோரிக்கையும் எழுந்தன. இந்த சூழலில், இது தொடர்பான கூட்டம் நேற்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் துணை ஆணையர் (சட்டம் &ஒழுங்கு) லட்சுமி தலைமையில் நடைபெற்றது.
இதில், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். அப்போது குளத்தின் சூழலை பாதுகாக்கும் பொருட்டு இனி அங்கு விநாயகர் சிலைகளை கரைப்பதில்லை என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
மேலும், மாற்று ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு சூழலியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.